வெறித்தனமான ரசிகனா விஜய் சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆகிட்டாரம் – Tamil VBC

வெறித்தனமான ரசிகனா விஜய் சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆகிட்டாரம்

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய யுவன், தனது திரையுலக பயணம் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். யுவனின் இசையை ரசிக்காத இளைஞர்கள் தமிழகத்தில் அறவே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய இசையின் மூலம் தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உடையவர். இவருடைய இசைக்காக மட்டுமே வெற்றிப்பெற்ற படங்களின் எண்ணிக்கை ஏராளம்.

நடிகர் சரத்குமார் நடிப்பில் கடந்த 1977-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய யுவன் (yuvan), அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை வரை பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவ்வாறு இளசுகளின் இசை அரசனாக வலம் வரும் யுவன் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை நேற்று கொண்டாடினார். இதற்காக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய யுவன் (Yuvan), தனது திரையுலக பயணம் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது நடிகர் விஜய் (Vijay) உடனான சமீபத்திய சந்திப்பு குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசும்போது நடிகர் விஜய்யின் மகன் தனது தீவிரமான ரசிகன் என்பதை தெரிவித்தார். அவர் Yuvanism என எழுதப்பட்ட டீ-சர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை விஜய்யின் உதவியாளர் தனக்கு அனுப்பியதாகவும், இதைப்பார்த்து தான் மிகவும் உற்சாகமடைந்ததாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் விஜய்யை சந்தித்தபோது, விஜய்யும் இதுகுறித்து என்னிடம் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் ஜேசன் சஞ்சய் Yuvanism என எழுதப்பட்ட டீ-சர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை விஜய் தான் தனது உதவியாளரிடம் கூறி யுவனுக்கு அனுப்ப சொன்னாராம். இந்த தகவலையும் யுவன் மேடையில் கூறினார்.

 

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.