2020 ஆம் ஆண்டிற்கு பின் நாடு எதிர்நோக்கப் போகும் பாரிய நெருக்கடி ? – Tamil VBC

2020 ஆம் ஆண்டிற்கு பின் நாடு எதிர்நோக்கப் போகும் பாரிய நெருக்கடி ?

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் கடுமையான மின்பற்றாக் குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுவசதிகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

மின்சார உற்பத்தி, பயன்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் மின் ​சேமிப்பு என்பன தொடர்பில் பொது வசதிகள் ஆணைக்குழு அண்மையில் ஆய்வொன்றை நடத்தியிருந்தது.அதிகரித்து வரும் மின் தேவைக்கேற்ப மின்சார உற்பத்தியில் புதிய வழிமுறைகளைக் கண்டறிவது இதன் பிரதான நோக்கமாகும்.

எனினும், இலங்கையில் மின்னுற்பத்தியை அதிகரிப்பதற்கான முறையான செயற்பாடுகள் இன்மையால் 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மின் உற்பத்தியில் காணப்படும் பற்றாக்குறைக்கான தீர்வாக கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட அனல் மின் நிலையங்கள் மின்சாரத் தேவையின் வெறும் 6 வீதத்தை உற்பத்தி செய்வதும் இதன்போது தெரியவந்துள்ளது.

எனினும், அவ்வாறான மின் நிலையங்களின் பாரிய பராமரிப்புச் செலவு காரணமாக ஒட்டுமொத்த மின் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.எனவே இதனை நிவர்த்தி செய்வதாயின் நீண்ட கால அடிப்படையிலான மின் உற்பத்தித் திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் பொதுவசதிகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *