மேற்கிந்திய தீவுகளின் அதிகாரிகளால் தடுக்கப்பட்ட இந்திய கிரிக்கட் வீரர்கள் – Tamil VBC

மேற்கிந்திய தீவுகளின் அதிகாரிகளால் தடுக்கப்பட்ட இந்திய கிரிக்கட் வீரர்கள்

மேற்கிந்திய தீவுகளில் அண்மையில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கி;ண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய அணியின் சில வீரர்கள், அந்த நாட்;டு அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தடுப்பூசி செலுத்தாத 7 வீரர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்த விடயம் தற்போதே தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக இந்திய இளையோர்; அணியின் மேலாளர் லோப்ஜாங் ஜி.டென்சிங் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் உள்ள போர்ட்ஒப் ஸ்பெயின் நகரை சென்றடைந்தபோது, விமான நிலையத்தில் சோதனை நடத்திய குடியேற்ற அதிகாரிகள், இந்திய அணியில் கொரோனா தடுப்பூசி போடாத வேகப்பந்து வீச்சாளர்; ரவிகுமார், துடுப்பாட்டவீரர் ரகுவன் உட்பட்ட 7 வீரர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது, எனவே அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி அறிவுறுத்தினர்.

 

எனினும் அவர்களது வயது பிரிவினருக்கு இந்தியாவில் இன்னும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை.அதனால் தான் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும் கேட்கவில்லை.

இதன் பின்னர் இந்திய அரசாங்கமும், கிரிக்கெட் சபை நிர்வாகிகளும், சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமும் தலையிட்ட பிறகுதான் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அணியின் மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இந்த கிரிக்கட் சுற்றில் பங்கேற்ற இந்திய இளையோர் அணி, 5 வது முறையாகவும் உலக கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.