வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் கட்டணம் தொடர்பான அறிவிப்பு – Tamil VBC

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் கட்டணம் தொடர்பான அறிவிப்பு

வெளிநாட்டுப் பயணத்துக்கான பி. சி. ஆர். பரி சோதனைக்கான கட்டணமாக இன்று வெள்ளிக் கிழமை முதல் சகலரிடமும் 6 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பி. சி. ஆர். பரிசோதனைக்கான கட்டணமாக சகலரிடமும் ரூபா 6,500 அறிவிடப்படும்.

வெள்ளிக்கிழமை முதல் பணத்தைச் செலுத்தி பற்றுச்சீட்டை பதிவின்போது சமர்ப்பித்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.