சிக்கலில் இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்ஷன வைரலாகும் ஜெயலலிதாவின் கடிதம் – Tamil VBC

சிக்கலில் இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்ஷன வைரலாகும் ஜெயலலிதாவின் கடிதம்

2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேஷ் தீக்ஷனவை வாங்கிய பின்னர், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனவுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தீக்ஷன ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளில் 70 லட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் சமூக ஊடகங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அத்துடன், சென்னை அணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

வைரலாகும் ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம்

கடந்த 2013ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடித்ததில் அவர், இலங்கை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி நடுவர்கள், அதிகாரிகள் என இலங்கையை சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் உறுதியளித்தால் மட்டுமே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது.

 

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.