அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மெக்ஸ்வெல் (Glenn Maxwell) தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார்.இவர்களின் திருமணத்துக்காக அச்சிடப்பட்ட தமிழ் மொழியிலான திருமண அழைப்பிதழ்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை மேற்கு மாம்பலத்தை பூர்வீகமாகக்கொண்டவரும் , அவுஸ்திரேலியாவில் வளர்ந்தவருமான வினி ராமனுக்கும், கிளன் மெக்ஸ்வெல் ( Glenn Maxwell)க்கும் 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன்பின்னர் கொரோனா காரணமாக பிற்போடப்பட்ட இவர்களது திருமணம் எதிர்வரும் மார்ச் 27-ம் திகதி நடைபெற உள்ளது.
இந்தநிலையில் வினிராமனின் திருமணத்தையொட்டி அவரது பெற்றோரால் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த தமிழ் அழைப்பிதழ் சமூக ஊடகங்கள் மற்றும் இணயத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.