சில உணவுகளை பச்சையாக சாப்பிடும் போது நமக்கு நிறைய ஆபத்துகள் வருகின்றது.அந்த வகையில் எந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாது என்று நாம் பார்க்கலாம்.அதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் நாம் காணலாம்.
பீன்ஸ்
பீன்ஸ் யை பச்சையாக சாப்பிடுவது நல்லது கிடையாது. அதில் பீன் லேக்டின் என்ற புரோட்டீன் இருக்கிறது. இதை சமைக்கும் போது அது அழிந்து விடும். அதுவே நீங்கள் அதை சமைக்காமல் சாப்பிடும் போது உடம்புக்கு கேடு விளைவிக்கிறது. எனவே பீன்ஸை 5 மணி நேரம் ஊற வைத்து 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து வேக வைத்து சாப்பிடுங்கள்.
கசப்பு பாதாம்
கசப்பு பாதாமிலும் சயனைடு உள்ளது. அமெரிக்க போன்ற நாடுகளில் இதன் விற்பனையை தடை செய்துள்ளனர். எனவே இனிப்பு பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
சேப்பன் கிழக்கு
சேப்பன் கிழங்கை சமைக்காமல் சாப்பிடும் போது அதிலுள்ள ஆக்ஸிலேட்ஸ் வீக்கத்தையும் எரிச்சலையும் உண்டாக்குகிறது. இது உதடுகள், வாய் மற்றும் தொண்டை பகுதியில் நமைச்சலை ஏற்படுத்தும். எனவே இதை பால் விட்டு சமைக்கும் போது இதன் வீரியம் குறையும்.
மரவள்ளி கிழங்கு
மரவள்ளி கிழங்கின் வேர்களிலும் இந்த சயனைடு காணப்படுகிறது. எனவே இந்த கிழங்கை நன்றாக சமைத்து சாப்பிடுவது மட்டுமே சிறந்தது. சமைக்காமல் சாப்பிட்டால் வயிற்று போக்கு, வயிற்று வலி, வாந்தி ஏற்படக் கூடும்.