முடிவடைந்த ஐபிஎல் 2022 மெகா ஏலம் சென்னை அணி தேர்வு செய்த வீரர்கள் யார் – Tamil VBC

முடிவடைந்த ஐபிஎல் 2022 மெகா ஏலம் சென்னை அணி தேர்வு செய்த வீரர்கள் யார்

ஐபில் 2022-க்கான மெகா ஏலம் பெங்களூருவில் கோலகலமாக நடைப்பெற்று முடிந்தது. கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின் அணிகள் முழுமையாக கலைக்கப்பட்டு அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுத்தனர்.எதிர்பாராததைப்போல, ஸ்ரேயாஸ் அய்யர், டேவிட் வார்னர் போன்ற ஒரு சில வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் ஆனார்கள். அதேபோல் இஷான் கிசான், தீபக் சஹர் போன்ற ஒரு சில வீரர்கள் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

சென்னை அணி வீரர்கள் சென்னை அணியில், இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா 16 கோடி, எம்எஸ் தோனி 12 கோடி, மொய்ன் அலி 8 கோடி, ருதுராஜ் கைக்வாட் 6 கோடி ஆகிய 4 வீரர்களை மிகப்பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்தது.மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடி ரூபாய் ஏலத்தொகையில் இந்த 4 வீரர்களுக்கு செலவிட்ட தொகை போக மீதி 48 கோடிகளுடன் சென்னை அணி நிர்வாகம் இந்த ஏலத்தில் களமிறங்கியது.

அதன்படி, எம்எஸ் தோனி (கேப்டன்/கீப்பர்), ருதுராஜ் கைக்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு (கீப்பர்), டேவோன் கான்வே, சுப்ரான்சு சேனாதிபதி, ஹரி நிஷாந்த், நாராயன் ஜெகதீசன்(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டுவைன் பிராவோ, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ட்வயன் பீட்ரஸ், மிட்செல்

சான்ட்னர், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, தீபக் சஹர், கே எம் ஆசிப், துசார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்சனா, ஆடம் மில்னே, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சலோங்கி.

இதனையடுத்து, இந்த வீரர்களை வாங்க செலவிட்ட 45.05 கோடிகள் போக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இன்னும் கூட 2.95 கோடிகள் மீதம் உள்ளது. இருந்தாலும், சுரேஷ் ரெய்னாவை கடைசி வரை எடுக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.