இந்திய ஐ.பி.எல் ஏலத்தை நடத்தியவர் மயங்கி வீழ்ந்தார் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது – Tamil VBC

இந்திய ஐ.பி.எல் ஏலத்தை நடத்தியவர் மயங்கி வீழ்ந்தார் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

இந்திய ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்களுக்கான ஏலத்தை நடத்திக்கொண்டிருந்தவர் மயங்கி வீழ்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் ஆரம்பமாகின்றன.அதற்கான ஏலம் இன்றும் நாளையும் இடம்பெறும் நிலையில் இன்றைய ஐபிஎல் ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் ஐ.பி.எல் ஏலத்தை நடத்திக்கொண்டிருந்த ஹக் எட்மீட்ஸ் (Hugh Edmeades) மயங்கி வீழ்ந்ததால் ஐ.பி.எல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.முன்னதாக ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை, 12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, 9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இந்திய வீரர் தேவ்தத் படிக்கல்லை 7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

இந்திய வீரர் ஹர்ஷல் பட்டேலை 10.75 கோடிக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது,இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை 5 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது,இந்திய வீரர் ஷிகர் தவானை, 8.25 கோடி ரூபாவுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது,இந்திய வீரர் நிதிஷ் ராணாவை, 8 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

இந்திய வீரர் முகமது சமியை, 6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது,அவுஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ் 7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது,தென்னாப்பிரிக்க வீரர் பெப் டூ ப்ளெசிஸை 7 கோடிக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது,நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட்ஐ. 8 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலம் எடுத்தது,இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்யை அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

மேற்கிந்தியாவின் வீரர் ஜேசன் ஹொல்டரை ரூ.8.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது,இந்திய வீரர் தீபக் ஹூடாவை 5.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.

இதேவேளை ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் மற்றும் பங்களாதேச வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரை ஏலம் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை.

https://youtu.be/PZHLQvXobpM

 

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.