வடக்கில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!! ஆபத்தான நிலையில் குடாநாடு – Tamil VBC

வடக்கில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!! ஆபத்தான நிலையில் குடாநாடு

வடக்­கில் கண­வன், மனைவி ஆகிய இரு­வர் எய்ட்ஸ் நோய்த் தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என எய்ட்ஸ் நோய்த் தடுப்­புப் பிரிவு தெரி­வித்­துள்ளது.கடந்த 1ஆம் திகதி எய்ட்ஸ் தினம் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. எய்ட்ஸ் நோய் தொடர்­பான பரி­சோ­தனை மேற்­கொள்ள முன்­வ­ரு­மாறு எய்ட்ஸ் நோய்த் தடுப்­புப் பிரி­வி­னர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் நோய் கார­ண­மாக கண­வன் மனைவி இரு­வ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளது நோய் தொடர்­பில் பரி­சோ­தனை மேற்­கொண்­ட­போது அவர்­க­ளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்­பது தெரி­ய­வந்­தது என்று தொற்­று­நோய்த் தடுப்­புப் பிரிவு தெரி­வித்­தது.இவர்­கள் வடக்­கில் வசிக்­கும் தம்­ப­தி­யி­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.கடந்த நவம்­பர் மாதம் வரை­யில் வடக்­கில் 35 பேர் இனங்­கா­ணப்­பட்­டி­ருந்­த­னர். தற்­போது அந்த எண்­ணிக்கை 38ஆக அதி­க­ரித்­துள்­ளது.

பிற மாகா­ணம் ஒன்­றில் சிகிச்சை பெற்­று­வந்த ஒரு­வ­ரும் சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­ற­லா­கி­வந்­துள்­ளார். இதனால் எண்ணிக்கை மூன்றால் அதிகரித்துள்ளது.இது­த­விர, இவர்­க­ளில் ஒரு­வர் குழந்தையைப் பெற்றெடுத் துள்ளார். எனி­னும் குழந்­தைக்கு இந்த நோய் இருப்­ப­தற்­கான எச்.ஐ.வி. வைரஸ் காணப்­ப­ட­வில்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.மற்­றொ­ரு­வ­ரும் குழந்­தை­யைப் பெற்றுள்­ளார். எனி­னும் 4 மாதங்­க­ளின் பின்­னரே அந்­தக் குழந்தை பற்­றிய நிலை தெரி­ய­வ­ரும். என்று தொற்­று­நோய்த் தடுப்­புப் பிரி­வி­னர் மேலும் தெரி­வித்­த­னர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *