மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று சம்பந்தரைப் பார்வையிட்ட மஹிந்தவும் புதல்வரும் – Tamil VBC

மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று சம்பந்தரைப் பார்வையிட்ட மஹிந்தவும் புதல்வரும்

வைத்தியசாலையில் உங்களைப் பார்க்கமுடியாது என அனுமதி மறுக்கப்பட்டது, உங்களைப்போன்ற தலைவர்கள் தீவிர அரசியலில் இருக்கவேண்டும் என்பதை எப்போதும் உணர்பவன் என்பதால் நேரடியாகவே வந்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.சுகயீனமுற்று கொழும்பு நவலோக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்றுவந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை நேற்றைய தினம் காலை பார்வையிட்டு சுகம் விசாரிக்கையிலேயே மகிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.உடம்பை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள், நான் தீவிர அரசியலில் இருந்தாலும் உடற்பயிற்சி, ஓய்வு என என் உடம்பையும் கவனித்துக் கொள்கிறேன்.

நீங்களும் சற்று ஓய்வெடுத்து அரசியல் வேலைகளையும் பாருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, உங்களைப்போன்ற மிதவாதத் தலைவர்கள் நம் நாட்டில் இருக்கவேண்டும். அரசியலில் நமக்கிடையே கருத்து முரண்பாடுகள், மாற்றுக் கொள்கைகள் இருக்கலாம்.ஆனால், அதற்கப்பால் ஒரு நட்பையும் மரியாதையையும் நான் உங்கள் மீது வைத்துள்ளேன். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டபோதும் நேரடியாகவே வந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.உங்களுடன் தொலைபேசியில் உரையாட முயன்றேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இங்கு அரசியல் குறித்து நான் பேச விரும்பவில்லை.

அது எமக்கு அப்பாற்பட்டது. நட்பு வேறு, அரசியல் வேறு. நீங்கள் சுகமடைந்த பின்னர் மீண்டும் ஒரு தடவை ஆறுதலாக சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.இதேவேளை, வைத்தியசாலைக்கு நேரடியாக வருகைதந்து பார்வையிட்டமைக்காக மகிந்தவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *