மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை – Tamil VBC

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எரிவாயு விபத்துக்கள் இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதனால் மின்சார கட்டமைப்புகளை சோதனையிட்டு பாதுகாப்பாக உள்ளதா என உறுதி செய்துக் கொள்ளுமாறு அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அந்த இடங்களில் உள்ள திரவ பெற்ரோலிய வாயு வெளியேறி காற்றில் கலந்துள்ளமையினால், மின்சார சுவிட்ச் மூலம் ஏற்படும் தீப்பொறி பாதிப்பை ஏற்படுத்திவிட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டில் எரிவாயு நாற்றம் வீசினால் மின்சார குமிழிகளை ஒளிர செய்யாமல், கதவு, ஜன்னல்களை திறக்காமல், நாற்றம் குறையும் வரை சமையல் எரிவாயுவை பயன்படுத்த வேண்டாம் என அவர் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ads

Recommended For You

About the Author: Roshany

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *