வெடிக்கும் சிலிண்டர்கள் இலங்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவம் – Tamil VBC

வெடிக்கும் சிலிண்டர்கள் இலங்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்

பன்னிப்பிட்டி-கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News  Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் அடுத்தடுத்து வெடிக்கும் சிலிண்டர்கள்! பீதியில் மக்கள் - தமிழ்வின்

அந்தவகையில், நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.

நவம்பர் 16 ஆம் திகதி, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

நவம்பர் 20 ஆம் திகதி, கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் அடுத்தடுத்து வெடிக்கும் சிலிண்டர்கள்! பீதியில் மக்கள் - தமிழ்வின்

ads

Recommended For You

About the Author: Divya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *