அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதில் புதிய நடைமுறை – Tamil VBC

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதில் புதிய நடைமுறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடுவதில் புதிய நடைமுறை ஒன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திரவப்பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் LANKA QR கட்டண முறையினூடாக குறித்த கட்டணம் அறவிடப்படவுள்ளது.

அந்தவகையில் இந்தக் கட்டண முறை எதிர்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண அறவீட்டு நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பேசிகளில் குறித்த தொகையை உள்ளிட்டு எந்தவொரு வங்கியினதும் LANKA QR செயலியின் ஊடாக, நுழைவாயிலில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணத்தைச் செலுத்த முடியும்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் இந்தக் கட்டண முறைமையை அமுலாக்குவதற்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ads

Recommended For You

About the Author: Roshany

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *