அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு மீண்டும் தடை – Tamil VBC

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு மீண்டும் தடை

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு மீண்டும் தடை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகி உள்ளது. எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் சொக்லேட், சீஸ், டொபி, பாஸ்தா, பல்வேறு இனிப்புகள், ஆப்பிள்கள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மிகப்பெரிய அந்நியச் செலாவணி நெருக்கடி உள்ள நிலையில் இவ்வாறான அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்கள் கொண்டு வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் உள்ள குறைந்த அளவிலான அந்நிய செலாவணி கையிருப்பினை செலவு செய்வது பொருத்தமற்ற செயல் என பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்களும் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு முன்னர் அத்தியாவசிய பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்க மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொண்டு பின்னர் அதனை இரத்து செய்தது.

அந்த நடவடிக்கையே இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பிற்கு காரணமாக என பொருளாதார வல்லுநர் குறிப்பிட்டுள்ளனர். உயர்தர சொக்லட்கள், சீஸ் வகைகள், பிற தின்பண்டங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன,

இந்த நேரத்தில் உள்நாட்டு உற்பத்திகளுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ads

Recommended For You

About the Author: Roshany

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *