அதிர்ச்சித் தகவல்; வீடுகளில் அடிக்கடி வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – Tamil VBC

அதிர்ச்சித் தகவல்; வீடுகளில் அடிக்கடி வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள்

இலங்கை வீடுகளில் எரிவாயு வைத்திருப்பது வெடிகுண்டு இருப்பது போன்று ஆபத்தான விடயமாகியுள்ளதென நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்காக பயன்படுத்தப்படும் உள்நாட்டு வாயுக்களின் இரசாயன விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வீட்டில் வெடி குண்டு வைத்துக் கொண்டு இருக்கும் நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அண்மைய நாட்களாக பல இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் அதிக அளவில் வெடிப்பதற்கு இந்த இரசாயன மாற்றமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பிரதான நிறுவனங்களும் இணைந்து இந்த இரசாயன மாற்றத்தை செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது தான் இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களிடம் கூறிய போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு மோசடியான செயல் எனவும் கொலைக்கு உதவும் வகையிலான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இணையத்தள ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ads

Recommended For You

About the Author: Roshany

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *