கொழும்பு மாநகரசபையை கைப்பற்றப் போவது யார்? வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவருக்கு மாநகர மேயராகும் சந்தர்ப்பம்!! – Tamil VBC

கொழும்பு மாநகரசபையை கைப்பற்றப் போவது யார்? வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவருக்கு மாநகர மேயராகும் சந்தர்ப்பம்!!

உள்ளுராட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரின் கவனமும் தற்போது கொழும்பு மாநகர சபை மீது திரும்பியுள்ளது.  காரணம் இம்முறை வரலாற்றில் முதல் முறையாக, தமிழர் ஒருவர் கொழும்பு மாநகர முதல்வராக சந்தர்ப்பம் காணப்படுவது தான் .கொழும்பு மாநகரில் வாழும் தமிழர்க்ள மனது வைத்தால் முதன் முதலாக கொழும்பு மாநகர சபையை தமிழர் ஒருவர் கைப்பற்றும் சந்தர்ப்பம் உருவாகும்.மத்தியில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு வைத்துள்ள அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தமது ஏணிச் சின்னத்தில் வழமை போல களம் குதித்துள்ளது .கொழும்பு வாழ் பிரபல தொழிலதிபர் சண் குகவரதன் இம்முறை கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் தனித்து போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை, தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.அத்தோடு, இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், ஆசனப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் அமைச்சர் மனோ கணேசன் தரப்பு தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு பிரதமர் ரணில் விடுத்த பகிரங்க அழைப்பை ஏற்று, நேற்று முன்தினம் இரவு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.இதிலும், இணக்கம் காணப்படாத நிலையில், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச் சின்னத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ளது.முன்னணியின் சார்பில் கொழும்பு மாநகர முதல்வர் வேட்பாளராக சண் குகவரதன் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை இனக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையில் சிங்கத்திற்கே சவால் விடுவது ஒன்றும் எளிதானதல்ல என்றபோதும் ஒட்டுமொத்த தமிழர்களும் மனது வைத்தால் கொழும்பில் எமது பலத்தை நிரூபிக்க முடியும். தலைநகர் கொழும்பு வாழ் மக்களுக்காகவும் மலையக மக்களுக்காகவும் குரல் கொடுத்து வரும் தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை தேசியக் கட்சிகளுக்கு பலத்த சவாலாக விளங்குவது நிட்சயம் என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தலைநகரில் வாழும் ஏறத்தாழ மூன்று லட்சம் தமிழர்களின் வாக்குகள் இம்முறை கொழும்பு மாநகர சபை யாருக்கு செல்லப் போகின்றதென்பதை தீர்மானிக்கப் போகின்றன.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *