அதிர்ச்சி சம்பவம் இறந்த பின் அசைந்த உடல் – Tamil VBC

அதிர்ச்சி சம்பவம் இறந்த பின் அசைந்த உடல்

உத்தர பிரதேசத்தில் இறந்து 7 மணி நேரம் ஆன ஒருவர் மீண்டும் உயிர் பிழைத்த அதிசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகேஷ் குமார்(40). இவர் அதே பகுதியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இவர் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீகேஷ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அணு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிர் இழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர் அவரது உடல் பிணவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. 7 மணிநேரத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் அவரது உடலை பார்க்க சென்ற போது ஸ்ரீகேஷின் உடல் அசைந்ததை கவனித்துள்ளனர்.

இதையடுத்து ஸ்ரீகேஷின் உடலை மீண்டும் பரிசோதனை செய்தபோது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீகேஷின் உறவினர்கள் கூறியதாவது, அவர் இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை. அவரை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து கிட்டத்தட்ட கொன்றுவிட்டனர்.

அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது புகார் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ads

Recommended For You

About the Author: Jack

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *