குடாநாட்டின் அனைத்து சபைகளிலும் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தது கூட்டமைப்பு!! – Tamil VBC

குடாநாட்டின் அனைத்து சபைகளிலும் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தது கூட்டமைப்பு!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுமுகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம், யாழில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி காரியாலயத்திலேயே இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்திலுள்ள பதினேழு சபைகளிலும் போட்டியிடவுள்ளதாகவும், இதற்கென ஏற்கனவே சாவகச்சேரி நகர சபைக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், எஞ்சியுள்ள பதினாறு சபைகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களே இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இதன்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளான யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதன்படி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், ஈ.சரவணபவன், மற்றும் புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர் .

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *