பாப்கார்னில் இவ்ளோ நன்மையா – Tamil VBC

பாப்கார்னில் இவ்ளோ நன்மையா

வீடுகளிலேயே நாம் அடிக்கடி பட்டர் பாப்கார்ன் மற்றும் உப்பு சேர்த்த பாப்கார்ன் செய்து ஸ்னாக்ஸ் ஆக சாப்பிட்டு வருகிறோம். தியேட்டர்களில் சினிமா பார்க்கும்போதும், வெளியூர் பயணம் செய்யும்போதும் பலரும் பாப்கார்னை தான் விரும்பி உண்பர். இது உலகம் முழுவதும் கிடைக்கும் மிகவும் பிரபலமான சிற்றுண்டி விருப்பங்களில் ஒன்றாகும். சிலர் திரைப்படம் பார்க்கும்போது மட்டுமே பாப்கார்னை சாப்பிடுகிறார்கள். மற்றவர்கள் அதனை ஆரோக்கியமான சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். பாப்கார்னில் நார்ச்சத்து முதல் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் வரை எனப் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. பாப்கார்னின் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்.

​பாப்கார்னின் வரலாறு

பாப்கார்ன் செய்யப் பயன்படுத்தப்படும் சோளத்தின் வரலாற்றைப் பற்றி பார்த்தோமேயானால் இது சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு டீயோசின்ட் என்ற காட்டுப் புல்லில் இருந்து உருவாக்கப்பட்டது. மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட சோளம் வளர்ப்பு பயிராக பயிரிடப்பட்டது.

1820-ம் ஆண்டின் முற்பகுதியில் தான் அமெரிக்காவில் பாப்கார்ன் உண்ணும் கலாச்சாரம் கொண்டு வரப்பட்டது. ‘பாப்கார்ன்’ என்ற வார்த்தையையும் ஜான் ரஸ்ஸல் பார்ட்லெட் என்பவரால் அகராதியில் சேர்க்கப்பட்டது. முதல் வணிக பாப்கார்ன் இயந்திரம் சிகாகோவில் சார்லஸ் கிரெட்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீராவியுடன் வேலை செய்து சோளத்தை வெடிக்கச் செய்யும்.

​முழு தானிய உணவு

சோளத்தில் இருந்து கிடைக்கும் பாப்கார்ன் நூறு சதவீதம் இயற்கையான முழு தானியங்களால் ஆனது. முழு தானியம் என்பதால் அதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது உங்களின் செரிமானத்தை மேம்படுத்த உதவும். மேலும், குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. அதோடு, இரத்த நாள சுவர்களில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை அகற்றுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவும் குறையும். நீரிழிவு நோயாளிகளுக்கு பாப்கார்ன் சிறந்த ஆரோக்கியமான உணவு ஆகும்.

இருப்பினும், சந்தையில் கிடைக்கும் மசாலாக்கள் நிறைந்த பாப்கார்ன்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும். இதனால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

​அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

பாப்கார்னில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தான் நம் உடலில் உள்ள ப்ரீ ரேடிக்கல்களை அழிக்க உதவுகின்றன. மேலும், பாப்கார்னில் இருக்கும் பாலிபீனாலிக் கலவை புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களில் இருந்து உங்களைக் காக்கவும், எதிர்த்துப் போராடவும் உதவும். ப்ரீ ரேடிக்கல்கள் தான் உங்களுக்கு வயதான தோற்றம், சருமச் சுருக்கங்கள், அல்சைமர், முடி உதிர்தல் போன்ற பிற பிரச்சனைகள் ஏற்பட காரணமாக உள்ளது.

​எடையைக் குறைக்க உதவும் பாப்கார்ன்

பாப்கார்ன் உங்களின் எடையைக் குறைக்க உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா. ஆம், பாப்கார்னில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. அதாவது, உருளைக்கிழங்கு சிப்ஸை விட பாப்கார்னில் குறைந்த கலோரிகள் மட்டுமே உள்ளன. அதேபோல் இது இயற்கையாகவே கொழுப்பு மற்றும் மற்றும் சர்க்கரை இல்லாதது.

​குளூட்டன் இல்லாதது

பாப்கார்ன் பசையம் (குளூட்டன்) இல்லாதது. இதனை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் மைக்ரோவேவ்வில் செய்யப்படும் பாப்கார்ன் அல்லது வெண்ணெய் அதிகமாக சேர்த்த பார்ப்கார்னுக்கு இவை பொருந்தாது. சாதாரணமாக தயாரிக்கப்பட்ட பாப்கார்ன்களை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *