காலையில் எழுந்தவுடன் இதை செய்தால் நல்லது நடக்குமா – Tamil VBC

காலையில் எழுந்தவுடன் இதை செய்தால் நல்லது நடக்குமா

காலையில் கண் விழித்ததும் கண்டதையெல்லாம் பார்க்கக் கூடாது. உள்ளங்கையைப் பார்ப்பது தான் உத்தமம்.

30 முகூர்த்தங்களைக் கொண்டது ஒரு நாள் என்று சொல்வார்கள். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை. இந்த நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன் கண்விழிக்க வேண்டும். அதுவே உடலுக்கு நல்லது. அங்ஙனம் எழுவதால் ரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, பித்த நோய்கள் வராது. சிந்தனை தெளிவானதாகப் பிறக்கும்.
காலையில் கண் விழித்ததும் கண்டதையெல்லாம் பார்க்கக் கூடாது. உள்ளங்கையைப் பார்ப்பது தான் உத்தமம். மனதை ஒரு முகப்படுத்தி, புனிதமான காரியங்களைச் செய்தவர்களை, தெய்வ உருவங்களை மனதில் பதித்து தியானிப்பது நல்லது. கண் விழித்தவுடன், பசுமையான விருட்சங்கள், கனி, பூ, வலம்புரிச்சங்கு, நிலைக்கண்ணாடி, தெய்வத்தின் திருவுருவப் படங்கள் போன்றவைகளைப் பார்த்தால் அன்று முழுவதும் மகிழ்ச்சியான நிலை உருவாகும்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.