கிளிசரினால் இவ்வளவு நன்மையா? – Tamil VBC

கிளிசரினால் இவ்வளவு நன்மையா?

கிளிசரின் சிறந்த சுத்திகரிப்பு, டோனிங் மற்றும் ஈரப்பதமூட்டும் குணங்களை கொண்டது எல்லா சருமத்தினரும் கிளிசரின் பயனப்டுத்தலாம் என்பதால் இது சோப்பு முதல் பெரும்பாலான இயற்கை தயாரிப்புகளில் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. கிளிசரின் வெளியில் கிடைக்கிறது என்றாலும் இதைவீட்டிலேயே எளிதாக தயாரித்து பயன்படுத்தலாம். அதை தான் இப்போது பார்க்க போகிறோம்.

கிளிசரின் வீட்டில் தயாரிக்கும் முறை

தேவை

தேங்காய் எண்ணெய் – 1 கப்.

ஆளிவ் எண்ணெய் – 1 கப்

கல் உப்பு – 1 கப்

லை – 1 டீஸ்பூன் (லை என்பது கார ரசாயனமாகும். இதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இது சோடியம் ஹைட்ராக்ஸைடு ஆகும். திரவ வடிவிலும் படிக வடிவங்களிலும் கிடைக்கிறது)

தண்ணீர் – 1 கப்

வாணலியில் தேங்காயெண்ணெய், ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து படிப்படியாக 1 டீஸ்பூன் லை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இந்த கலவை கெட்டியாகும் வரை கிளறி எடுக்கவும். பிறகு அரை கப் கல் உப்பு சேர்த்து கலவையை குளிரவிடவும்.

சிறிது நேரம் கழித்து சோப்பு போன்றவற்றை மேலே இருந்து நீக்கினால் அடியில் இருக்கும் திரவம் கிளிசரின் ஆகும். இதை சிறிய ஒப்பனை பாட்டிலில் ஊற்றி பாட்டிலை இறுக்கமாக மூடிவிடவும். இதை 3 முதல் 4 வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.

கிளிசரின் – உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்கிறது

லிப் பாம் பயன்படுத்துபவர்களாக இருந்தால் வீட்டில் தயாரிக்கப்படும் இந்த கிளிசரின் பயன்படுத்தலாம். இது உதடுகளை இயற்கையாகவே இளஞ்சிவப்பு மற்றும் மென்மையாக வைத்துகொள்ள செய்யும். உதடு வெடிப்பு, உதடு கருமை போன்றவற்றையும் வெளியேற்றும்.

கிளிசரின் கால்களை மென்மையாக்குகிறது

குளிர்காலத்தில் வறட்சியால் கால்களில் வெடிப்பு, விரிசல் போன்றவை உண்டாகும். இதை அலட்சியம் செய்யும் போது உள்ளிருக்கும் இறந்த செல்கள் அப்படியே தேங்கி மேலும் அழுக்கை உண்டாக்கும். இது நாளடைவில் தீவிரமாகி இரத்தப்போக்கை உண்டாக்கும்.

இதை கட்டுப்படுத்த சிறந்த வழி கிளிசரின் தடவுவதல் தான். இரவு நேரத்தில் கிளிசரின் தடவி இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு சாக்ஸ் அணிந்துகொண்டு வந்தால் ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.

வறண்ட சருமத்தை மீட்டெடுக்கிறது

முகம் அதிக வறட்சியை கொண்டிருந்தால் இரவு நேரத்தில் முகத்தை சுத்தம் செய்து உலரவிடவும். பிறகு படுக்கைக்கு செல்லும் போது பன்னீருடன் கலந்து கிளிசரின் பயன்படுத்தி வந்தால் அது வறட்சியை நீக்கும்.

மேலும் சருமம் மந்தமாக இருப்பதை மட்டுப்படுத்துகிறது. மேலும் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க செய்கிறது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *