உங்க கண்ணுக்குக் கீழே சுருக்கம் விழுகிறதா? அதனை போக்க சூப்பரான டிப்ஸ் – Tamil VBC

உங்க கண்ணுக்குக் கீழே சுருக்கம் விழுகிறதா? அதனை போக்க சூப்பரான டிப்ஸ்

பொதுவாக சிலருக்கு முகத்தில் வேறு ஏங்கும் சுருக்கங்கள் இருக்காது, கண்ணுக்கு கீழ் மட்டும் இது போன்ற சுருக்கங்கள் இருக்கும்.

இந்த சுருக்கங்கள் உங்களின் முக அழகை கெடுக்கக் கூடும்.

அதிக நேரம் தொலைபேசி, தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை இது வர ஆரம்பிக்கின்றது.

இதிலிருந்து விடுபட ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு கிண்ணத்த்தில் 1 டீஸ்பூன் வாழைப்பழம் மற்றும் அவகேடோ பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக பிசைந்து விட்டு, அந்தக் கலவையை உங்கள் கண்ணின் கீழ் பகுதியில் தடவுங்கள். பின் சிறிது நேரம் கழித்து அதனை கழுவி விடுங்கள். சிறந்த முடிவுகளைப் பெற தொடர்ந்து தினமும் இதனை செய்யுங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி மோர் சேர்த்து கலக்குங்கள். ஸ்பேட்டூலாவின் உதவியுடன் இந்தக் கலவையை, உங்களின் கண்களுக்குக் கீழ் மற்றும் முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் கவனமாக தடவுங்கள். 15 நிமிடங்களுக்குப் பின்னர் ஈரமான காட்டன் துணியால் அதனை துடைத்து எடுத்து விடுங்கள் போதும்.
  • ஒரு தேக்கரண்டி யோகர்ட், 1 தேக்கரண்டி தேன் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நன்றாக கிரீம் போன்ற கலவை கிடைக்கும் வரை அதனை கலக்கிக் கொள்ளுங்கள். அந்தக் கலவையை உங்கள் கண்களுக்கு கீழ் பயன்படுத்துங்கள். பின் 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவுங்கள்.
  • 2 டேபிள் ஸ்பூன் அலோவேரா ஜெல், 1 டேபிள் ஸ்பூன் யோகர்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிகாயின் சாறு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும். கலக்கிய பின் கிடைக்கும் பேஸ்ட்டை உங்களின் விரல்களை கொண்டு, கண்களுக்கு கீழே தடவவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து அதனை டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுத்து விடுங்கள். சுருக்கங்கள் அற்ற கண்களைப் பெற, வாரத்திற்கு இரண்டு முறை இதுபோல் செய்யுங்கள்.
  • ஒரு துண்டு பப்பாளி மற்றும் சிறிதளவு தேனை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரு பிளெண்டரில் கிரீமியாக வரும் வரை கலக்கிக் கொள்ளவும். கிரீமியாக உள்ள பேஸ்டை உங்களின் கண்களுகுக் கீழே பயன்படுத்துங்கள். பின் 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
  • ஒரு தேக்கரண்டி ஜெலட்டின் உடன் கிரீன் டீ பொடியைச் சேர்த்து கலக்கவும். அதனுடன் சூடான தேங்காய் எண்ணெய் 4-5 சொட்டு சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை பட்டர் பேப்பரில் தடவி குளிர விடவும். பட்டர் பேப்பர் காய்ந்தவுடன் அதனை குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைக்கவும். பின்னர் பட்டர் பேப்பரை வெட்டி கண்களுக்குக் கீழே சுருக்கம் உள்ள இடத்தில் ஒட்டவும். சிறிது நேரம் கழித்து அதனை நீக்கி விட்டால் போதும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *