வரலாற்று சாதனை படைத்த ருதுராஜ் – கொண்டாடும் ரசிகர்கள் – Tamil VBC

வரலாற்று சாதனை படைத்த ருதுராஜ் – கொண்டாடும் ரசிகர்கள்

கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. சென்னை அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அசத்தாலன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிலைத்து நின்று ஆடிய பாப் டுப்ளஸ்ஸி 86 ரன்கள் அடித்து விளாசினார். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது.

இதனைத்தொடர்ந்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க சுபமான் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பான ஒரு தொடக்கத்தை கொல்கத்தா அணிக்கு கொடுத்தது. இரண்டு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இதில் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதில் 5 பவுண்டரி, 3 சிக்சரும் அடங்கும். நிதானமாக ஆடிய கில் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 2 ரன்னுக்கும், தினேஷ் கார்த்திக் 9 ரன்னுக்கும், சாகிப் அல் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இதையடுத்து, இந்த போட்டியில் சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் 25 ரன்கள் எடுத்த போது நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.

பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் 13 போட்டிகளில் 626 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இதனை டூ பிளெசிஸ் முறியடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பை 2 ரன்களில் அவர் தவறவிட்டார்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் ஆரஞ்ச் கேப் வென்ற வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். ருதுராஜ் 24 வயதில் ஆரஞ்ச் கேப் வென்று இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

அதிக ரன்கள்

ருதுராஜ் கெய்க்வாட் (635), சிஎஸ்கே – 16 போட்டிகள் டூ பிளெசிஸ் (633), சிஎஸ்கே – 16 போட்டிகள் கேஎல் ராகுல் (626), பஞ்சாப் கிங்ஸ் – 13 போட்டிகள்

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *