ஆன்லைன் மூலம் எப்படி சம்பாதிப்பது? எளிய வழிமுறைகள்: வாங்க பார்க்கலாம் – Tamil VBC

ஆன்லைன் மூலம் எப்படி சம்பாதிப்பது? எளிய வழிமுறைகள்: வாங்க பார்க்கலாம்

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனை வைத்துகொண்டு பலரும் பலவிதமான வழிகளில் சம்பாரிக்க தொடங்கி விட்டனர். அதிலும் இந்த கொரோனா காலக்கட்டத்தில், வீட்டிலே இருந்த பலர் புதியதாக யூ டியூப் சேனல் தொடங்கி, இப்போது சம்பாதித்து வருகின்றனர்.

3 வயது குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை யூடியூப் மூலம் சம்பாதிக்கின்றனர். அந்த வகையில், யூடியூப் மூலம் எப்படி பணம் சம்பாரிக்கவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்..

YouTube Partner Program

முதலில் யூடியூப் பார்ட்னர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். சேனல் ஆரம்பித்தவுடன் இந்த திட்டத்தில் நீங்கள் இணைய முடியாது. அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உங்கள் சேனலுக்கு முதலில் 1000 சந்தாதாரர்கள் (Subscribers) மற்றும் 4 ஆயிரம் மணி நேரம் பார்வைகளை ஒரு வருடத்துக்குள் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Ad Sense account வைத்திருக்க வேண்டும். கம்யூனிட்டி Guidelines- ஐ மீறியிருக்ககூடாது. இவையெல்லாம் ஒழுங்காக இருந்தால், கூகுள் பார்ட்னர் புரோகிராமில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.

YouTube Premium revenue

அடுத்ததாக, யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இணைந்து, போதுமானளவு வருவாய் நீங்கள் பெற்றுவந்தாலும், உங்கள் கன்டென்டை சந்தாதாரர்கள் விளம்பரம் இல்லாமல் பார்க்க பிரிமியம் சப்ஸ்கிரிப்சன் ஒன்றை வழங்குகிறது யூடியூப்.

இந்த சந்தா செலுத்தி ஒருவர் உங்கள் வீடியோவைப் பார்த்தால், அதற்கேற்பவும் உங்களுக்கு வருவாய் கிடைக்கும். பிரிமியம் செலுத்துபவர்கள் விளம்பரம் இல்லாமல் உங்கள் வீடியோவைப் பார்க்கலாம். அந்தளவுக்கு உங்கள் கன்டென்ட் தரமாக இருக்க வேண்டும்.

Channel membership

சேனல் உறுப்பினர் என்ற அம்சம் மூலமும் நீங்கள் யூ டியூப் மூலம் சம்பாதிக்கலாம். அதாவது, சேனல் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக நீங்கள் செய்யும் வீடியோக்கள், அவர்கள் மட்டுமே பார்க்க இயலும்.

இந்த ஆப்சன் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இணைந்திருக்க வேண்டும். ஆயிரத்துக்கும் மேலான சப்ஸ்கிரைபர்கள் இருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் தொடர்பான தவறான கன்டென்ட் கொண்ட வீடியோக்களை போட்டிருக்கக்கூடாது, விதிமுறைகளை மீறியிருக்ககூடாது.

இந்த விதிமுறைகளுக்குட்பட்டவர்களுக்கு சேனல் உறுப்பினர் ஆப்சனை யூடியூப் வழங்குகிறது. கூகுள் விளம்பரம் இல்லாமல், கன்டென்டுகளுக்கு தொடக்கத்தில் அல்லது இடையில் தாங்கள் விரும்பும் பிராண்டுகளை விளம்பரம் செய்யலாம். இதற்கு நீங்கள் குறைந்தபட்சம் 10,000 சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்க வேண்டும்.

யூட்யூப் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

விளம்பரம் மூலம் வரும் வருமானத்தில் 45 சதவிகிதத்தை யூடியூப் நிறுவனம் எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 55 சதவிகிதம் காணொளியைப் பதிவேற்றிய சேனலுக்குக் கிடைக்கும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *