ரஷியாவில் அதிகரித்த கொரோனா: ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா! – Tamil VBC

ரஷியாவில் அதிகரித்த கொரோனா: ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் தடுப்பூசியின் முயற்சியால் குறைந்து வந்தாலும் அதன் வீரியம் பலருக்கும் இன்று வரை பரவி கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7861681ஆக அதிகரித்துள்ளது. மேலும், 21,801 பேர் பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6916086ஆக உயர்ந்துள்ளது.

அதிலும், நாட்டில் அதிகபட்சமாக மாஸ்கோவில் 4410 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 984 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை ரஷியாவில் கொரோனாவால் 2,19,329 பேர் பலியாகியுள்ளனர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *