முட்டையை இந்த உணவுகளுடன் தயவுசெய்து சாப்பிடாதீங்க ஆபத்தாம்! வாங்க என்னவென்று பார்ப்போம் – Tamil VBC

முட்டையை இந்த உணவுகளுடன் தயவுசெய்து சாப்பிடாதீங்க ஆபத்தாம்! வாங்க என்னவென்று பார்ப்போம்

ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் உணவுகளில் முக்கியமாக முட்டை காணப்படுகின்றது. முட்டையில் இருக்கக்கூடிய சத்துக்கள். புரத சத்து, வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

 

இவ்வாறு ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் முட்டையுடன், சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

டீ , தேநீர் மற்றும் முட்டை:

டீ, தேநீர் அருந்தும் போது முட்டையும் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தினை வைத்திருப்பவர்கள் இனி அந்த தவறினை செய்யவே கூடாதாம்.

ஏனெனில் தேயிலை இலைகளில் உள்ள டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதங்களுடன் இணைந்து டானிக் அமில புரதச் சேர்மத்தை உருவாக்கி பெரிஸ்டால்சிஸின் செயல்பாட்டைக் குறைத்து குடல் பாதையில் மலத்தை சேமிக்கும் நேரத்தை நீடிக்கும், இது மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும்.

சர்க்கரை மற்றும் முட்டை:

முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து அதை சமைத்த பிறகு முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும்.

மேலும், நச்சுத்தன்மையுள்ள இந்த சேர்மத்தை உறிஞ்சுவது மிகவும் கடினம், மேலும் இரத்தம் உறைந்து போகும். ஆகவே சீனி முட்டையை பயன்படுத்தி பிரட் ரோஸ்ட் செய்வதை சற்று தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மீன் மற்றும் முட்டை:

வேகவைத்த முட்டைகள் மற்றும் மீன்களின் கலவையானது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.  சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த கலவையானது ஒவ்வாமையுடன் பல நோய்களையும் ஏற்படுத்துவதால், இவற்றினை சேர்த்து சாப்பிடக்கூடாது.

பன்னீர் மற்றும் முட்டை:

முட்டை மற்றும் பன்னீர் இரண்டும் புரதத்தின் நல்ல ஆதாரங்கள், ஆனால் உங்கள் செரிமானத்தை மோசமாக்கும் என்பதால் முட்டை மற்றும் பன்னீரை ஒன்றாக சாப்பிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சோயாபால் மற்றும் முட்டை:

பலர் சோயா பாலையும் முட்டையையும் சேர்த்து சாப்பிடுவார்கள். முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்கு தெரியாமல் இப்படி உண்கிறார்கள்.

இது நமது உடல், புரோட்டினை உறிஞ்சுவதை தடுப்பதுடன், உடல்சிதைவு பிரச்சனையை ஏற்படுத்துமாம்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.