அடிக்கடி வாய் புண் ஏற்படுகிறதா? அதை போக்க எளியவழிமுறை: வாங்க என்னவென்று பார்ப்போம் – Tamil VBC

அடிக்கடி வாய் புண் ஏற்படுகிறதா? அதை போக்க எளியவழிமுறை: வாங்க என்னவென்று பார்ப்போம்

இந்த நவீன காலத்தில் உடலில் பல வித காரணங்களால் பல திசைகளில் இருந்து உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் வாய் புண் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் இடத்திலும் இந்த பாதிப்பு உள்ளது.

பொதுவாக வாய் புண் என்றால் உதடு, நாக்கு மற்றும் கன்னத்தின் மறுபக்கம் போன்ற இடங்களில் வருவதுண்டு. இந்த பிரச்சனையால் சாப்பிட முடியாமல் பலர் கஷ்டப்படுவதுண்டு. இந்த பிரச்சனை வருவதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்..

  • இந்த வாய்ப்புண் என்பது நமக்கு ஒரு சில நாட்களுக்கு மட்டும் அதிக தொந்தரவை கொடுக்கும், ஆனால் இந்த பிரச்சனை வெகு நாட்களாக ஒருவருக்கு இருந்து வருகிறது என்றால் அது வாய் கேன்சர் இருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.
  • உடலில் பித்தம் அதிகரிப்பது, உடல் சூடு, மன அழுத்தம், உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, இரும்பு சத்து குறைபாடு, வைட்டமின் B போன்ற குறைபாடுகளால் தான் வாய் புண் ஏற்படுகிறது.
  • உடலில் நீர்ச்சத்து குறைகின்றது என்றால் இது போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தி வந்தாலே போதும் இந்த வாய் புண் பிரச்சனை குணமாகும்.
  • வாய் புண் பிரச்சனையால் அதிகம் அவதிப்பட்டவர்கள் தேன் அல்லது வெண்ணையை புண் உள்ள இடத்தில் அப்ளை செய்து வர கூடிய விரைவில் புண் குணமாகும். அதேபோல் பாலில் தேனை சிறிதளவு கலந்து தொடர்ந்து அருந்தி வர வாய் புண் குணமாகும்.
  • தேங்காய் பால் அல்சர் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வினை அளிக்கும் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல் இந்த தேங்காய் பால் வாய் புண் குணமாக ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *