வாழைப்பழம் அதிகமா சாப்பிடுபவரா? அவதானம் எனிமே சாப்பிடாதீங்க ஆபத்தாம்! – Tamil VBC

வாழைப்பழம் அதிகமா சாப்பிடுபவரா? அவதானம் எனிமே சாப்பிடாதீங்க ஆபத்தாம்!

வாழைப்பழத்தை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதில் அதிகப்படியான பொட்டாசியம், ஃபைபர் இருக்கிறது அத்துடன் குறைந்த கலோரிகளே இருக்கிறது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு சிறந்த உதாரணம் வாழைப்பழம் தான்.

பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ள வாழைப்பழத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள்

உடல் எடை அதிகரிக்கும்

வாழைப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பது உண்மை தான் ஆனால் அதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது, எடை அதிகரிக்கச் செய்யும். மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் குறைந்தது 105 கலோரிகள் இருக்கும்.

ஒற்றைத்தலைவலி

மைக்ரேன் என்று சொல்லப்படும் ஒற்றைத்தலைவலிக்கு உடலில் சுரக்கும் தைரமின் என்னும் சுரப்பி தான் காரணம் . இவை அதிகப்படியான வாழைப்பழம் சாப்பிட்டால் சுரக்கும்.

பல் சொத்தைகள்

வாழைப்பழத்தில் அதிகப்படியான ஸ்டார்ச் இருப்பதால் பற்சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உணவுப்பொருளை மெல்லும் போது ஸ்டார்ச்சுகள் பல் இடுக்குகள் போய் தங்கிவிடுகிறது. சரியாக சுத்தம் செய்யாத போது பல் இடுக்கில் இருக்கும் ஸ்டார்ச்சுகளிலிருந்து பாக்டீரியா பரவி பல் வலி, பற்சொத்தை போன்றவை ஏற்படுகிறது.

சிறுநீரகம்

சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றோலோ அல்லது சிறுநீரகத்தொற்று போன்ற பாதிப்புகள் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகரிக்கும்.

நரம்பு பாதிப்பு

வாழைப்பழத்தில் விட்டமின் பி6 அதிகப்படியாக இருக்கிறது மருத்துவர்களின் அறிவுரையின்றி அளவுக்கு மீறி விட்டமின் பி6 எடுத்துக்கொண்டால் அது நரம்புகளை பாதிக்கும்.

வாயுத்தொல்லை

வாழைப்பழத்தில் இருக்கும் கரையும் தன்மையுள்ள ஃபைபர் மற்றும் ஃப்ரூக்டோஸ் என்னும் இரண்டு வேதிப்பொருளும் உடலில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தக்கூடியது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *