தொப்பையை குறைக்கணும்னா இந்த கஞ்சியை மட்டும் சாப்பிடுங்க போதும் – Tamil VBC

தொப்பையை குறைக்கணும்னா இந்த கஞ்சியை மட்டும் சாப்பிடுங்க போதும்

அகத்தி மரத்தின் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன.அகத்திக்கீரையில் மொத்தம் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் குறிபிடப்பட்டுள்ளது.இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்தும், 1.4 சதவிகிதம் கொழுப்புச்சத்தும், 3.1 சதவிகிதம் தாது உப்புகள் மற்றும் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.

இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரை மிகசிறந்த மருந்தாகும்.உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இதை வைத்து சுவையான செய்வது எப்படி என பார்க்கலாம், இந்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைவதுடன், தொப்பையும் குறையும்.

தேவையான பொருட்கள் அகத்திக்கீரை – 2 கைப்பிடி புழுங்கலரிசி – 100 கிராம் பூண்டுப்பல் – 10
மிளகு – 10 வெந்தயம் – 10 சீரகம் – அரை தேக்கரண்டி உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு

செய்முறை
அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.மிளகு, பூண்டை தட்டி வைக்கவும். புழுங்கல் அரிசியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அகத்திக்கீரையை போட்டு அதனுடன் தட்டி வைத்த பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், வெந்தயம் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

அகத்திக்கீரை வெந்ததும் தண்ணீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் பொடித்த அரிசியை போட்டு வேக வைக்கவும்கஞ்சி பதம் வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு வேக வைத்த அகத்திக்கீரை போட்டு கலந்து பரிமாறவும்.சத்தான சுவையான கஞ்சி ரெடி.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *