ஒரே செடியில் 839 தக்காளி பழங்கள்! கின்னஸ் சாதனை படைத்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த நபர் – Tamil VBC

ஒரே செடியில் 839 தக்காளி பழங்கள்! கின்னஸ் சாதனை படைத்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த நபர்

ஒரே செடியில் 839 தக்காளி பழங்களை அறுவடை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த நபர்…

பிரிட்டனை சேர்ந்த 43 வயதான டக்ளஸ் ஸ்மித்(Douglas Smith)என்பவர் ஒரு செடியில் 839 தக்காளி பழங்களை அறுவடை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

அவர், விதையிலிருந்த தக்காளி செடியை வளர்த்து, வாரத்திற்கு 3 முதல் 4 மணிநேரம் தக்காளி செடிக்காக நேரத்தை செலவிட்டுள்ளார்,.

6 மாதங்களில் அந்த செடியில் இருந்து 839 தக்காளி பழங்கள் கிடைத்துள்ளது. இந்த தக்காளியை பறிக்கும் போது உள்ளூர் போலீசாரையும் அழைத்துள்ளார்,

இதனால் இது கின்னஸ் உலக சாதனையாக்கப்பட்டது. 839 தக்காளி பழங்களை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதற்கு முன் தக்காளி செடியின் ஒரு தண்டில் 448 தக்காளியை வளர்த்தது சாதனையாக இருந்தது. அதனை தற்போது டக்ளஸ் முறியடித்துள்ளார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *