இந்த ராசியினர்கள் கருப்பு நிற செருப்பை அணியக்கூடாதாம்: ஏன் அணியக்கூடாது? ஜோதிடம் கூறுவது என்ன? வாங்க பார்க்கலாம் – Tamil VBC

இந்த ராசியினர்கள் கருப்பு நிற செருப்பை அணியக்கூடாதாம்: ஏன் அணியக்கூடாது? ஜோதிடம் கூறுவது என்ன? வாங்க பார்க்கலாம்

நீங்கள் எந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் உங்களுடைய செருப்புகளை நீங்கள் எந்த நிறத்தில் எப்படி அணிந்து கொள்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் கவனியுங்கள். அதில் சில மாற்றங்களை கொண்டு வாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.

முதலில் ரொம்ப இறுக்கமாக இருக்கும் காலணியும் அணிய கூடாது. அதற்காக ரொம்பவும் பெரிய தாக இருக்கக்கூடிய காலணியும் அணியக்கூடாது. உங்களுக்கு எது பொருத்தமாக உள்ளதோ, அதை அணிந்து கொள்வதுதான் சிறந்தது.

கால் பாதங்களில் அளவுக்கு ஏற்றவாறு காலணிகளை அணியாவிட்டால் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

துலாம்

நீங்கள் துலாம் ராசிக்காரர்கள் ஆக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் கருப்பு நிற செருப்பை தவிர்ப்பது நல்லது. கருப்பு நிற செருப்பை நீங்கள் போட்டுக் கொண்டால், திருமண வாழ்வில் பிரச்சனை இருக்கும். புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். பாதத்தில் அடிக்கடி வலி ஏற்படும். பாதத்தில் புண் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நிரந்தரமாக உங்களால் ஒரு வேலையை செய்ய முடியாது. அங்கு இருக்கறவங்க கிட்ட சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை கருப்பு நிற செருப்பை துலாம் ராசிக்காரர்கள் தவிர்த்துவிடுங்கள்.

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி. கருப்பு நிறத்திற்கு பதிலாக சந்தன நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் நீங்கள் செருப்பு அணிந்து கொண்டால் மிகவும் நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் கும்ப ராசிகாரர்களுக்கு சனி பகவான் ராசிநாதனாக உள்ளதினால் இவர்களும் முடிந்தவரை கருப்பு நிற செருப்பை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் விருச்சிக ராசிக்காரர்கள் சந்தன நிறம், வெள்ளை நிறத்தில் செருப்பு அணிந்து கொண்டால் மிகவும் நல்லது. ரிஷபம் துலாம் ராசிக்காரர்கள் சிவப்பு நிற செருப்பை அணிந்து கொள்ளலாம். கல்லு பதித்த கோல்டன் கலர் செருப்பும் இவர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசி கன்னி ராசிக்காரர்கள் வெள்ளை நிற செருப்பு, சிவப்பு நிற செருப்பு அணிந்து கொள்வது சிறப்பு. கடக ராசிக்காரர்கள் கருப்பு நிற செருப்பு, கரும்பச்சை நிறத்தில், ஊதா நிறத்தில் செருப்பு அணிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் வெள்ளை நிறத்திலும், ஊதா நிறம், கருப்பு நிறத்தில் செருப்பு அணிந்து கொள்வது நல்லது. தனுசு, மீன ராசிக்காரர்கள் அரக்கு நிற செருப்பு, சந்தன நிற செருப்பு, சில்வர் நிற செருப்பை அணிந்து கொள்வது மிகவும் நல்லது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *