வேறொருடன் தொடர்பு வைத்திருந்த மகளை தாய் தனது மருமகனுடன் சேர்ந்து கொலை! – Tamil VBC

வேறொருடன் தொடர்பு வைத்திருந்த மகளை தாய் தனது மருமகனுடன் சேர்ந்து கொலை!

வேறொருடன் தொடர்பு வைத்திருந்த மகளை தாய் தனது மருமகனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணகுமார்(38). இவருக்கு ரஞ்சிதா (29) என்ற மனைவியும், 8 வயதில் மகளும் உள்ளனர்.

கல்யாணகுமார் அப்பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்த நிலையில், திடீரென ரஞ்சிதா உயிரிழந்துவிட்டதாக கூறி அவரின் சடலத்தை எரிக்க முயன்றுள்ளனர்.

தகவல் அறிந்த பொலிசார் மயானத்துக்கு வந்து பாதி எரிந்து கொண்டிருந்த நிலையில் இருந்த ரஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில், ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டதாக உறவினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பெலிசாருக்கு தெரியாமல் உடலை எரித்ததாக 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், ரஞ்சிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து, கல்யாணகுமார், ரஞ்சிதாவின் தாய், நண்பர் ஆகியோரிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ரஞ்சதிதாவிற்கும் வேறொருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதுடன், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததும் கல்யாண்குமாருக்கு தெரியவந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கணவர் கண்டித்ததால், ரஞ்சிதா காதலனுடன் தங்கியதாக கூறப்படுகின்றது. பின்பு காவல்நிலையத்தில் கல்யாண்குமார் மனைவியை மீட்டுத் தரும்படி கூறியுள்ளார்.

பொலிசாரும் சமாதாம் செய்து கணவருடன் ரஞ்சிதாவை அனுப்பி வைத்துள்ளனர். பின்பு வீட்டிற்கு வந்த பின்பு தொடர்பை துண்டிக்குமாறு கோரியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த கல்யாணகுமார் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

அப்போது, ரஞ்சிதாவின் கால்களை தாய் பிடித்துக்கொண்டு உதவி செய்துள்ளார். பின்னர் விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக உடலை எரித்துவிட கல்யாணகுமாரின் நண்பரின் உதவியுடன் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, மூன்று பேர் மீதும் கொலை வழக்கை பதிவு செய்த பொலிசார் கைது செய்த் சிறையில் அடைத்துள்ளனர்.

 

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *