பிரபல நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம்: சோகத்தில் அவரே வெளியிட்ட பதிவு: சோகத்தில் ரசிகர்கள் – Tamil VBC

பிரபல நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம்: சோகத்தில் அவரே வெளியிட்ட பதிவு: சோகத்தில் ரசிகர்கள்

பிரபல நடிகை நந்திதாவின் தந்தை திடீரென மரணமடைந்து விட்டதாக அவரே தெரிவித்துள்ளார்.

அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நந்திதா, இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, சமீபத்தில் வெளியிட்ட பதிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில், எனது அப்பா சிவசாமி (வயது 54) நேற்று காலமானார் என்பதை எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நடிகை நந்திதாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *