தாலி கட்டிய பெண்ணிற்கு மணமகன் வரதட்ஷனை கொடுமை.. கண்ணீருடன் மணமகள் புகார் – Tamil VBC

தாலி கட்டிய பெண்ணிற்கு மணமகன் வரதட்ஷனை கொடுமை.. கண்ணீருடன் மணமகள் புகார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் டானிலிம்டா பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கடந்த பிப்ரவரியில் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மணமகனை திருமணம் செய்துள்ளார்.

திருமணமான 10 நாட்கள் கழித்து இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது. அதற்கு அடுத்த நாளே கணவரும் அவரது பெற்றோரும் சேர்ந்து வரதட்சணை ஏன் கொண்டு வரவில்லை எனக்கூறி அந்த பெண்ணை தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனால், மனைவியுடன் நெருங்கி பழகுவதை மணமகன் நிறுத்தியுள்ளார். மேலும், தன்னுடன் ஒரே கட்டிலில் படுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் மணமகன் அந்த பெண்ணை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி பெண் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நடந்ததை கூறி அழுதுள்ளார்.

இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர், மணமகன் வீட்டாரை சமரசம் செய்ததுடன்,பெண்ணை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டோம் என்று அவர்கள் உறுதியளித்ததால் மகளை மீண்டும் கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மீண்டும் அந்த பெண்ணை கணவர் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பொறுமை இழந்த அந்த பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில்,. திருமணமான உடனேயே, கணவர் மற்றும் மாமனார் வரதட்சணை கொண்டு வரவில்லை என்று தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர் பத்து நாட்கள் கழித்து என் கணவர் என்னுடன் திருமண உறவு கொள்வதை நிறுத்திவிட்டார், நாங்கள் எங்கள் படுக்கையறையில் ஒன்றாக இருந்த போதெல்லாம், அவர் என்னுடன் விசித்திரமாக நடந்து கொண்டார்.

அவர் என்னை மோசமாக அடித்தார். மேலும், எனது தோற்றம் பிடிக்கவில்லை என்றும் அவர் வேறு சில பெண்ணுடன் பழகுவதாகவும் கூறினார்… என்று அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து போலீசார் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார், மாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *