வீட்டில் செல்வம் சேர, கடன் பிரச்சனைகள் நீங்க வெள்ளிக்கிழமைகளில் இதை செய்தாலே போதும் எல்லாம் நீங்கி விடும் – Tamil VBC

வீட்டில் செல்வம் சேர, கடன் பிரச்சனைகள் நீங்க வெள்ளிக்கிழமைகளில் இதை செய்தாலே போதும் எல்லாம் நீங்கி விடும்

வெள்ளிக்கிழமையானது தெய்வங்களுள் மகாலட்சுமி தேவிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் பலரும் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெற பலவாறு பூஜைகளை செய்வார்கள். இதனால் வீட்டில் செல்வம் சேரும், கடன் பிரச்சனைகள் நீங்கும் மற்றும் வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தந்திர சாஸ்திரத்தில், செல்வத்தை பெறுவதற்கான சில எளிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

அவற்றை ஒருவர் தவறாமல் பின்பற்றினால், அவர் செல்வம் தொடர்பான அனைத்து சிக்கல்களில் இருந்தும் விலகுவர்.

 

  • உங்களுக்கு பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருந்தால், வெள்ளிக்கிழமைகளில் பின்வரும் விஷயங்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் மகாலட்சுமி தேவி உங்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.
  • வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் செல்வம் பெருகுவதற்கு, லட்சுமி தேவிக்கு முன் இரண்டு முக நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் பணம் அதிகம் சேரும்.
  • வெள்ளிக்கிழமை நாளில் பூஜை அறையில் உள்ள லட்சுமி தேவிக்கு நல்ல மணம் கொண்ட அடுக்கு மல்லி பூவை வைத்து வழிபட்டு வந்தால், லட்சுமி தேவியின் முழு அருளைப் பெறலாம்.
  • லட்சுமி தேவி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். வெள்ளிக்கிழமை அன்று தாமரை மலரால் லட்சுமி தேவிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியமும் கிட்டும்.
  • லட்சுமி தேவிக்கு வாசனை நிறைந்த பொருட்கள் என்றால் பிடிக்கும். எனவே வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு நல்ல வாசனைமிக்க சந்தனத்தைப் படைப்பதன் மூலம், அதிர்ஷ்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
  • வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு எட்டுவிதமான எண்ணெயால் காலையும், மாலையும் தீபம் ஏற்றி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். ஏனெனில் இம்மாதிரி செய்வது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். இதனால் லட்சுமி தேவியின் மனம் குளிர்ந்து, அவரது முழு ஆசீர்வாதத்தைப் பெறலாம்.
  • வெள்ளிக்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சந்தன நறுமணம் கொண்ட வாசனை திரவியங்களை பயன்படுத்தினால், வேலை மற்றும் வணிகத்தில் இரட்டிப்பு முன்னேற்றத்தைக் காணலாம்.
  • ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பசு மாட்டிற்கு வைக்கோல் மற்றும் வெல்லத்தை கொடுப்பது நல்லது. இதனால் லட்சுமி தேவியின் அருள் முழு குடும்பத்திற்கும் கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை அன்று ஒரு சிறிய தேங்காயை ஒரு மஞ்சள் துணியில் கட்டி, வீட்டு சமையலறையின் கிழக்கு மூலையில் கட்டி தொங்கவிடுங்கள். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் உணவு மற்றும் பணத்திற்கு ஒருபோதும் குறை இருக்காது.

 

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *