ஆப்பாயில் தர தாமதமானதால் ஹோட்டலை அடித்து உடைத்த காவலர்கள்! – Tamil VBC

ஆப்பாயில் தர தாமதமானதால் ஹோட்டலை அடித்து உடைத்த காவலர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். அருண்குமார் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர்கள் இருவரும் தங்கள் நண்பர் விஜி என்பவருடன் இணைந்து நாஞ்சி கோட்டை சாலையிலுள்ள ராம்குமார் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் இரவு சாப்பிடும்போது ஆப்பாயில் கேட்டுள்ளனர்.

ஆப்பாயில் வர தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் சப்ளை செய்து வந்த 15 வயது சிறுவனை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது ஹோட்டல் உரிமையாளர் ராம்குமார் தலையிட்டு தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் உள்ள நாற்காலிகளை வீசி ஹோட்டலில் பொருட்களை உடைத்து சூறையாடினர்.

இதனால் ஹோட்டல் உரிமையாளர் மனைவியின் கையில் காயம் ஏற்பட்டது. பிரச்சனையில் காவலர் அருண்குமாருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். மேலும் காவலர்கள் பாலசுப்பிரமணியன், அருண்குமார் அவரது நண்பர் விஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள விஜியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *