தங்கம் வேண்ட காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி .. இன்றைய நிலவரம் – Tamil VBC

தங்கம் வேண்ட காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி .. இன்றைய நிலவரம்

தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள வந்த நிலையில், செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது.

ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த மூன்று நாட்களில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 9) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,434 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த நாளில் இதன் விலை 4,450 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 35,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 128 ரூபாய் குறைந்து 35,472 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும், தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,814 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,798 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அதேபோல, 38,512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 128 ரூபாய் குறைந்து 38,384 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மும்பையில் ரூ.4,612 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,405 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,405 ஆகவும், கேரளாவில் ரூ.4,415 ஆகவும், டெல்லியில் ரூ.4,625 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,665 ஆகவும், ஒசூரில் ரூ.4,458 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,460 ஆகவும் இருக்கிறது. இதனிடையே, வெள்ளி விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது.

MARKETS-PRECIOUS/

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.69.30 ஆக இருந்தது. இன்று அது ரூ.68.30 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *