கொவிட் தொற்றாளர்களின் உயிரை காப்பாற்றும் அபூர்வ மருந்தை இழந்த இலங்கை – Tamil VBC

கொவிட் தொற்றாளர்களின் உயிரை காப்பாற்றும் அபூர்வ மருந்தை இழந்த இலங்கை

உலக நாடுகளில் கொவிட் நோயாளர்களின் உயிரை காப்பாற்ற அனுமதி வழங்கப்பட்ட ரெகன் கோவ் என்ற மருந்தை இலங்கைக்கு கொண்டு வர முடியாமல் போயுள்ளது. இதன்பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரெகன் கொவ் என்ற மருந்து தீவிர ஆபத்தான நோயாளிகளுக்கு உட்பட வழங்கும் போது நூற்றுக்கு 31 வீதம் வெற்றிகரமான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

அவதானமிக்க நோயாளிகளின் உயர் அவதானம் அதன் மூலம் 81வீதம் குறைவடைந்துள்ளதாக பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு தற்போது ரெகன் கொவ் மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு வழங்கப்பட்டதன் ஊடாகவே ரெகன் கொவ் எனப்படும் மருத்து தொடர்பில் உலகில் முதல் முறையாக பேசப்பட்டது. கொவிட் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப் அந்த மருத்து மூலம் குணமடைந்துள்ளார். அவராலேயே அந்த மருத்து தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் அந்த மருத்து பரிசோதனை மட்டத்திலேயே காணப்பட்டுள்ளது. பின்னர் அந்த மருத்திற்கு பல நாடுகளின் அனுமதி கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மருத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக தனியார் நிறுவனம் இலங்கை சுகாதார அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அரசியல் அழுத்தத்திற்கமைய அந்த அனுமதி திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *