போலீஸ் விசாரணையில்.. மாற்றி மாற்றி பேசும் மீரா மிதுன்? .. சைபர் கிரைமின் புதிய முடிவு இதுவா? – Tamil VBC

போலீஸ் விசாரணையில்.. மாற்றி மாற்றி பேசும் மீரா மிதுன்? .. சைபர் கிரைமின் புதிய முடிவு இதுவா?

நடிகை, பிக்பாஸ் பிரபலம், பிரபல மாடல் என பன்முகம் கொண்ட மீரா மிதுன், அண்மைக் காலமாகவே சர்ச்சைக்குரிய பல பதிவுகளை பதிவிட்டும் பேசியும் வந்திருந்தார்.

இந்த நிலையில்தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர், நடிகையர் பற்றி தரக்குறைவாக பேசியதை அடுத்து அவர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கண்டனங்கள் வலுத்து வந்தன. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு கொடுத்த புகாரின் பேரிலும், சமூகவலைதளங்களில் இணையவாசிகள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் மீரா மிதுன் மீதான கைது நடவடிக்கை தீவிரமானது.

 

பின்னர் கேரளாவுக்குச் சென்று அவரை கைது செய்த தமிழக போலீசார் அவரை அதிரடியாக சென்னைக்கு கொண்டு வந்தனர். மீரா மிதுன் மீது அவதூறாகப் பேசியது, கலகத்தை மூட்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார், வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

 

ஆனால் கைது செய்வதற்கு முன்பாக மீரா மிதுன் போலீஸ் தன்னை தொட்டால் தன்னை தானே கத்தியால் குத்திக் கொள்வதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஒரு பெண்ணுக்கு இப்படி நடப்பதா? என்றெல்லாம் பேசி அழுது முதல்வரிடம் கூட உதவிகேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதனை அடுத்து தமது ஆண் நண்பருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட மீரா மிதுனை போலீசார் அழைத்து வரும் போதுகூட, போலீசார் தனக்கு அராஜகம் செய்வதாக மீரா மிதுன் கத்திக் கூச்சலிட்டு கொண்டே வந்தார். மேலும் தான் நடிக்கும் படங்கள் வரிசையாக வெளியாவதால் பலருக்கும் அதில் அதிருப்தி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் போலீஸ் விசாரணையில் மீரா மிதுன் திடீர் என மாறி மாறி பேசுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதாவது போலீஸ் விசாரணையின்போது மீரா மிதுன் சொன்னதையே திரும்பச் சொல்வது, கேட்கும் கேள்வி ஒன்றாகவும் அவர் சொல்லும் பதில் ஒன்றாகவும் இருப்பது, உள்ளிட்ட பலதரப்பட்ட முன்னுக்குப் பின் முரணான பதில்கள் அவரிடம் வருவதாலும், போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அவர் கொடுக்காததாலும், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதும் போலீசார், அவரை மனநல மருத்துவரின் உதவியுடன் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

அண்மையில் கூட, தான் கைது ஆவதற்கு முன்பாக பேசிய மீரா மிதுன், கடந்த 5 வருடமாக, தான் பேசும் சர்ச்சை கருத்துக்களுக்காக தன்னை போலீசார் கைது செய்ய முயற்சிப்பதாகவும், ஆனால் காந்திஜியெல்லாம் ஜெயிலுக்கு போகலையா? என்பதுபோல் பேசியிருந்தார். இப்

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *