வீட்டின் அனைத்து பிரச்சனைகளும் தீர இதை மட்டும் செய்யுங்கள் ! – Tamil VBC

வீட்டின் அனைத்து பிரச்சனைகளும் தீர இதை மட்டும் செய்யுங்கள் !

வீட்டில் சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். என்ன செய்தும் உங்கள் வீட்டில் நல்லது மட்டும் நடக்கவே மாட்டேங்குது, என்பவர்கள் மட்டும் இந்த பதிவினை படித்தால் போதும்.
வீட்டில் சந்தோஷம் இருக்காது. மன நிம்மதி கெடும். சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். உறவுகளுக்கு இடையே ஒற்றுமை இருக்காது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுடைய வீட்டில் இருந்தால், இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். சுத்தமான கல் உப்பை புதியதாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரம் செய்ய போகும் அன்றுதான் கல் உப்பை கடையில் இருந்து வாங்க வேண்டும்.

சற்று பெரிய மண் கிண்ணத்தை வாங்கி தண்ணீரில் நன்றாக ஊற வைத்து கழுவி உலர வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த மண் கிண்ணத்தில் கல் உப்பைப் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த கல் உப்புக்குள் 1/2 ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்த மஞ்சள் நிற கல் உப்பின் மேல் 11 மிளகுகளை, மேலே தெரியும் படி வைத்து விடுங்கள்.
தயார் செய்த இந்த மண் கிண்ணத்தை உங்களுடைய வீட்டில் வரவேற்பறையில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் வைக்கலாம். எல்லோர் கண்களுக்கும் தெரியும் படி வைத்தாலும் தவறு இல்லை. யார் கண்ணுக்கும் தெரியாமல் உயர்ந்த இடத்தில் வைத்தாலும் தவறு இல்லை. ஆக மொத்தத்தில் உப்பில், கஸ்தூரி மஞ்சளும் மிளகும் சேர்த்து உங்கள் வீட்டில் இருக்க வேண்டும்.

இந்த மண் அகல் கிண்ணத்தை உங்களுடைய வீட்டில் வைத்த பின்பு நிச்சயமாக நல்ல மாற்றத்தை உங்களால் உணரமுடியும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். கசப்பான சம்பவங்கள் நடப்பது குறையும். படிப்படியாக உங்களுக்கு சந்தோஷம் வந்து குவியும். வீட்டிற்குள்ளே நல்லது நுழையும்.

வாரம் ஒருமுறை வேண்டுமானலும் இந்த மாற்றி புதிய உப்பு, மிளகு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து வைக்கலாம். பழைய உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *