உலகிலேயே அதிக காரம் கொண்ட மிளகாய் எது தெரியுமா? அது எங்கே கிடைக்கும் தெரியுமா? – Tamil VBC

உலகிலேயே அதிக காரம் கொண்ட மிளகாய் எது தெரியுமா? அது எங்கே கிடைக்கும் தெரியுமா?

இந்திய உணவுகள் உலகில் அதிகம் காரமான உணவுகளாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இந்திய உணவுகளில் மிளகாய்கள் நேரடியாகவோ அல்லது பொடியாகவோ கலக்கப்படுகிறது.

அதற்கு முக்கியகாரணமே இந்தியாவில் மிளகாய் அதிகம் விளைவது தான். தன் நாட்டில் விளையும் பொருட்களை தன் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உலக மக்களின் வழக்கம்.

மிளகாய்களில் பல வகைகள் உள்ளது, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய் என பல வகைககள் உள்ளன.

இதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அளவிலான காரம் இருக்கும். மேலும், உலகின் காரமான மிளகாய் எது? அது எங்கு பயிர் செய்யப்படுகிறது தெரியுமா?

அமெரிக்காவில் பயிர் செய்யப்படும் கரோலினா ரீப்பர் என்ற மிளகாய் தான் உலகின் காரமான மிளகாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

மேலும், இந்த மிளகாய் பார்ப்பதற்கு குடை மிளகாய் வடிவில் இருந்தாலும் இந்த வகை மிளகாய்க்கு தான் காரம் அதிகம். இதை விட காரமான மிளகாய் இந்த உலகில் வேறு எங்கும் இல்லையாம்.

2012-ம் ஆண்டு இந்த மிளகாயை சவுத் கரோலினா பல்கலைகழகத்தில் ஆய்வு செய்தனர். அப்பொழுது இதன் காரத்தன்மையை ஆய்வு செய்ய ஸ்கோவைல் ஹீட் யூனிட் என்ற அளவு கோலை எடுத்துக்கொண்டனர் இந்த மிளகாய் 15,59,300 ஸ்கோவைல் ஹீட் யூனிட் காரத்தை பதிவு செய்தது.

இதையடுத்து, பொதுவாக காரத்தன்மை எல்லாம் இந்த ஸ்கோவைல் ஹீட் யூனிட் முறையில் தான் ஆய்வு செய்யப்படுகிறது. அதிக ஸ்கோவைல் ஹீட் யூனிட் கொண்ட பொருள் அதிக காரத்தன்மை உடையது எனவும், குறைவான ஸ்கோவைல் ஹீட் யூனிட் கொண்டது குறைவான கார தன்மை கொண்டது எனவும் அர்த்தம் கொள்லாம்.

இந்த மிளகாயை நாம் வாயிலேயே வைக்க முடியாத அளவிற்கு கார தன்மை கொண்டதாக இருக்கிறது. இது எந்த அளவிற்கு சாப்பிடுவதற்கு ஆபத்தானது என்றால் கடந்த 2018-ம்ஆண்டு நடந்த உணவு போட்டியில் பங்கு கொண்ட இந்த நபர் அளவிற்கு அதிகமாக இந்த கரோலினா ரீப்பர் மிளகாயை சாப்பிட்டதால் அவருக்கு தீவிரமான தலைவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம்….

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *