இடி, மின்னல் என்றால் என்ன? அது எப்படி உருவாகின்றது வாங்க பாக்கலாம் – Tamil VBC

இடி, மின்னல் என்றால் என்ன? அது எப்படி உருவாகின்றது வாங்க பாக்கலாம்

புவியில் உள்ள அனைத்து பொருள்களும் மின்துகள்களை [Electric Charges {Electric charges are nothing but protons and electrons} ) கொண்டது.

இதற்கு மேகங்களும் விதி விளக்கல்ல. மின்னல்களை பற்றி அறிந்துக் கொள்ளும் முன் அதை உருவாக்கும் மேகங்களை பற்றியும் அறிந்துக் கொள்வது பயனுள்ளது ஆகும்.

அப்படி இரண்டு வேறுபட்ட மின்துகள்களை கொண்ட இரு மேகங்கள் மோதும் போது அந்த இரு மேகங்களின் சமன்பெரும்.அப்படி, சமன்பெரும் போது அதில் இருந்து வெளியேறும் சக்தியே மின்னல் மற்றும் இடியாக மாறுகிறது.

மேலும், மின்னல் என்பது மேகங்களுக்கு இடையிலும்,மேகங்களுக்கு உள்ளேயும் அல்லது மேகங்கள் மற்றும் திரைக்கு இடையிலும் ஏற்படும்.

மின்னலைப் பற்றி நாம் புரிந்துகொள்ளும் முன் ஒரு சிறிய எடுத்துக்காட்டை புரிந்துகொள்வோம்.

இரண்டு கூரிய கற்களை அழுத்த தேய்த்தால் அதில் இருந்து தீப் பொறியும் சத்தமும் வருவது இயல்பல்லவா. இப்போது அந்த இரண்டு கற்களின் இடத்தில் இரண்டு மழை மேகங்கள் உள்ளன (ஆம், வானத்தில் தான் அவை உள்ளன).

அந்த இரண்டு மேகங்களும் காற்றின் உராய்வால் மின்துகள்களை தன்னுள் பெற்றுள்ளன.

அப்படி வானம் முழுதும் மின்துகள் கொண்ட மேகங்கள் உலாவும் போது ஒரு மேகம் இன்னோரு மேகத்தின் போது இயல்பே.அப்படி எதிர் மின்துகள் ( + மற்றும் – ) கொண்ட மேகங்கள் மோதினால் அதன் மின்துகள் சமன்பெற்று சக்தி வெளியேறும்.

வெளியேறும் சக்தியானது மின்னலின் வடிவில் சூரியனின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்திற்கு ஈடாக (30,000 செல்சியஸ்) உணரப்படும்.

மின்னல்கள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது,

மேகங்களுக்குள்
மேகங்களுக்கு இடையில்
மேகங்களுக்கும் பூமிக்கும் இடையில்

ஒரு மேகம் இரு வேறு மின்துகள்களை தன்னுள் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

அப்படி ஒரே மேகத்தினுள் இரு வேறு மின்துகள்கள் இருந்து அவை மோதும்போது மேகத்தின் உட்புறத்திலேயே மின்னல் ஏற்படும்.

இது பொதுவாக ஏற்படும் மின்னல் ஆகும்.இந்த வகை மின்னல் ஏற்படும்போது இடி இடிக்காமல் மேகத்தினுள்ளே வெளிச்சம் ஏற்படுவது மட்டும் தெரியும்.

மேகங்களுக்கு இடையில் மின்னல் ஏற்படும் போது அது மிக வெகு தொலைவில் காணும்படியாக இருக்கும்.

மேற்சொன்ன இரண்டு மின்னலை பற்றியும் மிக குறைந்த ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.

மேகங்களுக்கும் பூமிக்கும் இடையில் மேகங்களில் இருந்து பூமியை நோக்கி பாயும் இந்த மின்னல் தான் உயிர்களுக்கு ஊறு விளைவிப்பது ஆகும்.

இது மேலும் நேர்மறை (Positive) மற்றும் எதிர்மறை (Negative) மின்னல்களாக வேறுபடுகின்றன.

எதிர்மறை மின்துகள்களை கொண்ட மின்னலே 95 சதவீதம் பூமியில் விழும். நேர்மறை மின்னல் வெறும் 5 சதவீதம் தான் என்றாலும் உயிர்சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தை இது விளைவிக்கும்.

மின்னல் வரும் முன்னே இடியோசை வரும் பின்னே

மின்னல் முதல் வருவதும் அதன் பின் இடியோசை வருவதும் நாம் அறிந்ததே. அதற்கு காரணம் மின்னல் மற்றும் ஓசை பயணிக்கும் வேகத்தில் ஒளிந்துள்ளது.

இயல்பாக ஒளியானது நொடிக்கு 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. ஒலியின் வேகம் என்னமோ நொடிக்கு 1,225 கிலோமீட்டர் தான்.

ஒளியின் இந்த அதீத வேகத்தின் காரணமாகவே மின்னல் முதலில் நமக்கு தோன்றி அதன் பின் பொறுமையாக ஒலி நம் செவிகளுக்கு கேட்கிறது.

மேலும் மின்னல் மேகத்தின் அனைத்து பகுதியில் உருவாவதால் அங்கு இருந்து எழும் இடியோசை துருவங்கள் முழுதும் எதிரொளிகிறது.

மின்னல் பூமியில் மட்டும் ஏற்படும் ஒரு செயல் அல்ல. பூமியின் அருகில் உள்ள கோள்களான வியாழன் மற்றும் வெள்ளியிலும் மின்னல் ஏற்படுகின்றன.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *