உங்களுடைய மொபைல் களவாடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யணும் தெரியுமா? – Tamil VBC

உங்களுடைய மொபைல் களவாடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யணும் தெரியுமா?

இன்றைய நவீன உலகில் காலையில் தூங்கி எழுந்து இரவு தூங்க செல்லும் வரை அனைத்து வேலைகளையுமே ஸ்மார்ட் போன் மூலமாக தான் நாம் செயல்படுத்தி வருகிறோம்.

அந்த அளவிற்கு அதன் பிஸியான – காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலர் கழிவறைக்கு செல்லும்போது கூட ஸ்மார்ட்போனை கையோடு எடுத்து செல்லும் அளவிற்கு வந்துவிட்டோம் .

ஆனால் ஸ்மார்ட்போன் கையில் இருக்கும் வரை தான் எல்லாம் ஒரு வேளை தொலைந்துவிட்டால் நாம் என்னதான் செய்வது முதலில் என யாருக்கும் தெரிவதில்லை…

2 வருடங்களுக்கு முன்னர் ஒரு மொபைல் போன், ஒரு ஸ்மார்ட்போன் காணமால் போனால் செய்வதற்கு ஒரு சில விடயங்கள் மட்டுமே இருந்தன. \ ஆனால் இன்று ஒரு ஸ்மார்ட்போன் காணாமல் போனால் ஆயிரத்தெட்டு விடயங்களை செய்தே ஆக வேண்டும். செய்யவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். அப்படியாக உங்கள் ஸ்மார்ட்போன் காணாமல் போய் விட்டது அல்லது திருடு போய் விட்டது என்பது உறுதியாகிவிட்டது என்றால் நீங்கள் உடனே செய்ய வேண்டிய வேலைகள் என்ன?

முதலில் அப்படியாக உங்கள் ஸ்மார்ட்போன் காணாமல் போய் விட்டது அல்லது திருடு போய் விட்டது என்பது உறுதியாகிவிட்டது என்றால் நீங்கள் உடனே செய்ய வேண்டிய  வேலைகள் உள்ளன..

முதலில், சிம் கார்டை உடனடியாக பிளாக் செய்யவும். ஏனெனில் போன் திருடர்கள் உங்கள் பைனான்சியல் சேவைகளின் OTP-களை அல்லது பிற தனிப்பட்ட மெசேஜ்களை அணுக விட கூடாது.

நிச்சயமாக, புதிய சிம் கார்டுடன் அதே மொபைல் எண்ணை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் பழைய மொபைல் எண்ணுக்கு புதிய சிம் கார்டைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் முடிய சிறிது நேரம் ஆகலாம்.

இந்த காலம் முக்கியமானது மற்றும் திருடர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, பாதுகாப்பாக நம்பரை பிளாக் செய்யுங்கள்.

அடுத்ததாக, உங்கள் வங்கியை உடனே அழைத்து ஆன்லைன் வங்கி சேவைகளுக்கான அணுகலைத் தடுக்கவும். திருடர்கள் உங்கள் வங்கி கணக்குகளை அணுக முடிந்தால், அவர்கள் உங்கள் மொபைல் வழியாக தொடர்ந்து OTP-களைப் பெற்று உங்கள் பணத்தை திருட முடியும்.

உங்கள் ஸ்மார்ட்போன் திருடப்பட்ட பிறகு அதே தொலைபேசி எண்ணை வங்கி சேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மொபைல் எண்ணை மாற்ற உங்கள் வங்கியை நேரில் சென்று, அனைத்து பாஸ்வேர்ட்களையும் மீட்டமைத்து, பின்னர் மீண்டும் இணைய வழி வங்கி சேவையை பயன்படுத்தத் தொடங்குங்கள்.

ஆன்லைன் வங்கி சேவைகளை பிளாக் செய்த பிறகு, குறிப்பிட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட யுபிஐ மற்றும் பிற மொபைல் பேமண்ட்களையும் செயலிழக்க வைக்க மறக்காதீர்கள்.

சரிபார்க்கப்பட்ட Paytm, Google Pay மற்றும் பிற மொபைல் வேலட் ஹெல்ப் டெஸ்கை அழைப்பதன் மூலம் தொலைந்து போன உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Paytm, Google Pay மற்றும் பிற மொபைல் வேலட் ஆகியவற்றை திருடர்கள் அணுகுவதை தடுக்க முடியும்.

மேலும், உங்கள் ஸ்மார்ட்போன் திருடப்பட்டவுடன் திருடப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் இமெயில் ஐடி மற்றும் சோசியல் மீடியா அக்கவுண்ட்டுகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்வது நல்லது.

அவ்வாறு செய்வதன் மூலம், திருடர்களால் உங்கள் அருகிலுள்ள மற்றும் உங்களின் அன்பானவர்களை குறிவைத்து மோசடிகளை செய்ய முடியாது.

உங்கள் பணத்தை மற்றும் அடையாளத்தை நீங்கள் பாதுகாத்த பிறகு, அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று மொபைல் திருட்டு சம்பவத்தைப் புகாரளிக்கவும்.

மேலும், எஃப்.ஐ.ஆரின் ஒரு நகலை எடுக்க மறக்காதீர்கள், ஏனெனில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து யாராவது பணத்தை திருடினால் வங்கிகள் அல்லது வேலட் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு இது ஒரு ஆதாரமாக தேவைப்படும்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *