வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய நபர் – 8 அடி உயர கல் சிலை கண்டுபிடிப்பு – Tamil VBC

வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய நபர் – 8 அடி உயர கல் சிலை கண்டுபிடிப்பு

வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய நபர் ஒருவரின் இடத்தில் சுமார் 8 அடி உயரமுள்ள பெருமாள் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ஏலாக்குறிச்சியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், சரவணன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக, கடந்த இரண்டு தினங்கள் ஆட்களை வைத்து அஸ்திவாரம் தோண்டியுள்ளார்.

இதில் நான்கு அடி பள்ளம் தோண்டிய நிலையில் அதனுள் ஒரு கற்சிலை காணப்பட்டுள்ளது. அதனை வெளியே எடுக்கமுடியாததால், கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஜேசிபி உதவியுடன் அந்த சிலையை எடுத்துள்ளனர்.

குறித்த சிலை பெருமாள் என்றும் அதன் உயரம் 8 அடி என்றும் தெரியவந்துள்ளது. சிலையை அவதானித்த மக்கள் பெருமாள் சிலையினை சுத்தம் செய்து அதற்கு வழிபாடு நடத்தியுள்ளனர்.

பின்பு சிலையை கோட்டாச்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

சிலையை தொல்பொருள் துறையினர், ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பின்னர் தான் எந்த காலத்து சிலை எனத் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *