யூடியூப் சேனலை நடத்தி வரும் மதன் போலீசுக்கு முக்கிய சவால் ஒன்று விடுத்துள்ளார் – Tamil VBC

யூடியூப் சேனலை நடத்தி வரும் மதன் போலீசுக்கு முக்கிய சவால் ஒன்று விடுத்துள்ளார்

யூடியூப் சேனலை நடத்தி வரும் மதன், தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாக புகார்கள் எழுந்தது.

மேலும் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்ததுடன் விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் மதன் சேலத்தில் தலைமறைவாகி இருப்பது தெரிவந்துள்ள நிலையில், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரத்தில் தனது ரசிகைகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது.

பெண் ரசிகைகளுடன் அவர் பேசும் பேச்சுக்கள் போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது.

மதன்- பெண் ரசிகை இடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:-

ரசிகை: உங்கள் போட்டோவை எல்லாம் வெளியிட்டுள்ளார்களே?

மதன்: இன்று எனது போட்டோவை வெளியிட்டு ‘யூ டியூப்’ தொடர்பான செய்திகளை கூறிவருகிறார்கள். அதில் எனது அண்ணன் புகைப்படமும் உள்ளது. நான் புகைப்படம் எடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்தபோது நான் எடுத்த புகைப்படத்தை ஒரு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற வி‌ஷயங்களை ஜாலியாக, குஜாலாக எடுத்து கொள்ள வேண்டியது தான்.

ரசிகை: நீங்கள் ஜெயிலுக்கு சென்று விடுவீர்களா? உங்கள் சேனலை முடக்கி விடுவார்களா?

மதன்: அதற்கு வாய்ப்பே இல்லை. நம்பர் 1 லாயர்களை வைத்துள்ளேன். டெல்லியிலும் வக்கீல்கள் உள்ளனர். லட்சக்கணக்கில் இதற்காக செலவு செய்துள்ளேன். ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லை.

ஒருவேளை அப்படி நடந்தால் வெளியில் வந்து மீண்டும் ‘யூ டியூப்’ சேனலை தொடங்குவேன். அதற்கு மதன் ‘யூ டியூப் சேனல் என்றே பெயர் வைப்பேன். அப்போது இவர்களை கிழிகிழி என கிழித்து தற்போது இருப்பதை விட வேகமாக செயல்படுவேன்.

ரசிகை: இதற்கெல்லாம் கைது செய்வார்களா?

மதன்: அதானே… நம் தலைவர் நித்யானந்தாவே வெளியில் இருக்கும்போது என்னை கைது செய்து விடுவார்களா என்ன? இதற்கெல்லாம் பயந்து நான் முடங்கமாட்டேன்.

மதன்: நான் ஜாதி, மதம் எதுவும் பார்ப்பதில்லை. சாமி கும்பிடுவதும் இல்லை. எல்லோரும் எனக்கு பொதுவானவர்களே. இவ்வாறு மதனும், பெண் ரசிகையும் பேசும் ஆடியோ நீண்டு கொண்டே செல்கிறது.

ரசிகையுடன் மதன் நள்ளிரவில் போனில் பேசியுள்ளார். மணி 12.30 ஆகுது. தூங்க செல்லுங்கள் என்று கூறும் மதன் முடிவில் ஐ லவ் யூ என்றும் கூறுகிறார்.

மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த ஆடியோ உரையாடல்களை வைத்து மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *