ஒரு கிலோ (Miyazaki) மாம்பழம் ரூ.2.70 லட்சமா? மரத்தை பாதுகாக்க இவ்வளவு பேரா! – Tamil VBC

ஒரு கிலோ (Miyazaki) மாம்பழம் ரூ.2.70 லட்சமா? மரத்தை பாதுகாக்க இவ்வளவு பேரா!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள் இருவர் அவர்களின் 2 மாமரங்களை பாதுகாக்க 4 காவலாளிகள், 6 நாய்களை நியமித்துள்ளனர்.

காரணம் அந்த மாமரங்கள் Miyazaki மாம்பழங்களை வழங்கும் மரங்கள். உலகளாவிய சந்தையில் இந்த Miyazaki மாம்பழம் ஒன்றின் விலை ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்.

உலகின் மிக உயர்ந்த விலை கொண்ட மாம்பழம் இந்த Miyazaki மாம்பழங்கள். இந்த வகை மாம்பழங்களில் antioxidants, beta-carotene, folic acid மிகுதியாக உள்ளதால் கண் சோர்வுக்கு மிகவும் நல்லது.

பழத்தோட்ட தம்பதியர் ராணி மற்றும் சங்கல்ப் பரிஹார் ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டு மா மரக்கன்றுகளை நட்டனர். ஆனால், அந்த இரண்டு மா மரக்கன்றுகள் ரூபி நிற மாம்பழங்களான ஜப்பானிய மியாசாகியாக உருவெடுக்கும் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது.

விவசாய தம்பதியினரின், கடந்த ஆண்டு, சில திருடர்கள் அவர்களின் பழத்தோட்டங்களுக்குள் நுழைந்து மாம்பழங்களைத் திருடியதாக கூறினர்.

அதனால், இந்த ஜோடி இரண்டு மா மரங்களை பாதுகாக்க முடிவெடுத்தனர். அதனால், தம்பதிகள் இருவர் அவர்களின் 2 மாமரங்களை பாதுகாக்க 4 காவலாளிகள், 6 நாய்களை நியமித்துள்ளனர்.

ஜப்பானின் மியாசாகி நகரில் இவ்வகை மாம்பழங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மாம்பழத்தின் எடை 350 கிராம் மற்றும் 15% அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரையை கொண்டது.

இந்த மாம்பழங்களில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இந்த மாம்பழனங்களின் உற்பத்தி அதிகமாகி இருக்கும்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *