உலகில் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுப்பிடிப்பு – Tamil VBC

உலகில் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுப்பிடிப்பு

உலகில் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்ததாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும். இதனைத்தொடந்து, 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்வானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் கடந்த 1-ம் தேதி அரசு துணையுடம் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

இவை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.

வைரத்தை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தின் மூலம் கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *