தெலுங்கானா மாநிலத்தில் உணவை சாப்பிட கைவைத்த நபர்- அமர்ந்தபடியே உயிரிழந்த சோகம்! – Tamil VBC

தெலுங்கானா மாநிலத்தில் உணவை சாப்பிட கைவைத்த நபர்- அமர்ந்தபடியே உயிரிழந்த சோகம்!

எந்தவொரு வலியையும் அனுபவிக்காமல் நபர் ஒருவர் அமர்ந்து சாப்பாட்டில் கை வைத்தவாறு உயிரிழந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தினையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் தூப்ரான் கிராம எல்லையில் நடந்துள்ளது.

குறித்த நபர் சித்தி பேட்டை மாவட்டம் வர்கல் மண்டலம் துண்டு பல்லியைச் சேர்ந்த காசால சாயிலு(46). இவர் தனது உறவினர் வீட்டில் இறுதிச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு, தூப்ரான் வழியாக சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அல்லாபூரில் மதுவும், உணவு பொட்டலமும் வாங்கிக் கொண்டு தூப்ரான் – கஜ்வேல் சாலையின் அருகில் சற்று தூரத்தில் அமர்ந்து உண்பதற்காக உணவில் கையை வைத்துள்ள நிலையில், மாரடைப்பினால் இறந்துள்ளார்.

இறந்து சுமார் 24 மணி நேரம் ஆகிய நிலையில், அமர்ந்த படியே இருந்ததால் அவரது சடலம் கட்டையைப் போல் இறுகியுள்ளது.

வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். அப்பொழுது சாலையருகே அமர்ந்தபடி சாயலுவின் சடலத்தைக் கண்டுள்ளனர்.

விவசாயம் செய்து வரும் சாயலுக்கு குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சாயலுக்கு சைலண்ட் மயொகார்டியல் இன்பார்க்சன்(silent myocardial infarction) என்ற மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு மாரடைப்பு வரும் நபர்களுக்கு, வலியோ எந்தவொரு அறிகுறியோ தெரியாமல் உயிர் பிரிந்துவிடும் என்று கூறியுள்ளனர்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *