முதலமைச்சர் ஸ்டாலினிடம் கதறி அழுத துர்கா ஸ்டாலின்! என்ன நடந்தது? – Tamil VBC

முதலமைச்சர் ஸ்டாலினிடம் கதறி அழுத துர்கா ஸ்டாலின்! என்ன நடந்தது?

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அபார வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்தது, முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டுக்கு தேவையான, பெண்களுக்கு அவசியமான திட்டங்களை அமுல்படுத்துவதிலும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஸ்டாலின் பதவியேற்ற ஒரு மாதம் ஆன நிலையில், அவரின் நடவடிக்கைகளை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கோவை கொரோனா மையத்துக்கு நேரடியாக சென்று நோயாளிகளை நலம் விசாரித்தார்.

அன்றைய தினம், கொரோனா வார்டுக்குள் நான் போக வேண்டும் என்று ஸ்டாலின் சொன்னவுடன், அங்கிருந்த மருத்துவர்கள் வேண்டாம் என மறுத்துவிட்டார்களாம்.

ஸ்டாலினின் வயதுக்கு கொரோனா வார்டுக்குள் செல்வது மிக மிக அபாயமானது. விளையாட்டான காரியம் அல்ல, என பலமுறை எடுத்துக்கூறியும் தன்னுடைய முடிவிலிருந்து மாறாமல் இருந்திருக்கிறார்.

மேலும் சாதாரண பிபிஇ கிட் தான் இப்போது கைவசம் உள்ளது. கூடுதல் பாதுகாப்புடன் கூடிய பிபிஇ கிட் இல்லையே என்று சொல்லி ஸ்டாலினை தடுக்க நினைத்த போதும், சாதாரண பிபிஇ கிட்டை அணிந்து கொண்டு சென்றாராம்.

அப்போது ஸ்டாலினை தொடர்பு கொண்ட துர்கா ஸ்டாலின்,  “எங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க” என்று கூறி அழுதேவிட்டாராம்.

இதுதொடர்பாக அப்போதே விளக்கமளித்த ஸ்டாலின், “கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும்,, தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *